என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான பல பல சத்துக்கள் கொண்டா தானியம் நம் பனிவரகு தானியம்.
புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc), நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.
மேலும் பனிவரகின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் – பனிவரகு.
மற்ற சிறுதானியங்களை பற்றி தெரிந்துக்கொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- ½ கப் பனிவரகு மாவு
- 6 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1 காரட்
- 2 வெங்காயத் தாள்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
- சிறிது கடுகு
- 1 ஸ்பூன் மசாலா தூள் ((மிளகாய், தானிய, பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம் பொடித்தது))
- 10 கறிவேப்பிலை
- உப்பு
- சிறிது செக்கு கடலை எண்ணெய்
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- பனிவரகு மாவில் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சற்று நீட்ட உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும், மெல்லியதாகவும் நீளமாகவும் நறுக்கிய காரட், வெங்காயத் தாள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- இவை நன்கு வதங்கியதும் மசாலா பொடி சேர்த்து வேக வைத்த பனிவரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
- கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். பனிவரகு காய்கறி பிங்கர்ஸ் தயார்.
- குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி.
- தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான தானிய உணவு.
பனிவரகு காய்கறி பிங்கர்ஸ்
இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்த தானியம் பனிவரகு.