பானகம் / Panagam Recipe

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் சிறந்த பானம் பானகம். கோடைகாலத்தில் அதிக வெப்பம் தொடங்கும் காலத்தில் வரக்கூடிய ராம நவமி அன்று நம் முன்னோர்கள் கோடையை சமாளிக்க உடலின் வெப்பத்தை தணிக்க இந்த இதனை தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். உடலுக்கு ஊட்டத்தையும் அளிக்கும் சத்தான பானம். புதினாவை வைத்து தயாரிக்கப்படும் மற்றொரு முறை.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் வெல்லம் / கருப்பட்டி
  • 1 தண்ணீர்
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • ¼ ஸ்பூன் சுக்கு தூள்
  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • வெல்லம் அல்லது கருப்பட்டியை ஒரு 10 நிமிடம் ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
  • பத்து நிமிடங்களுக்குப் பின் அதனை மண், தூசு போன்றவை நீங்க வடிகாட்டிக் கொள்ளவேண்டும்.

  • அதனுடன் எலுமிச்சை சாறு, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவேண்டும்.
  • அவ்வளவு தான் உடலுக்கு ஊட்டமளிக்கும் பானகம் தயார். கடும் கோடையில் வெப்பத்தை தணிக்க உதவும். நாவறட்சியை குறைக்கும். இதனுடன் இரண்டு துளசி சேர்த்துக்கொள்ளலாம். சுவைக்கேற்ப மற்ற பொருட்களை கூட்டிக்குறைத்துக் கொள்ளலாம்.

பானகம்

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் சிறந்த பானம் பானகம். கோடைகாலத்தில் அதிக வெப்பம் தொடங்கும் காலத்தில் வரக்கூடிய ராம நவமி அன்று நம் முன்னோர்கள் கோடையை சமாளிக்க உடலின் வெப்பத்தை தணிக்க இந்த இதனை தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். உடலுக்கு ஊட்டத்தையும் அளிக்கும் சத்தான பானம்.
ஆயத்த நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 10 minutes