சிறந்த ஒரு ஆரோக்கிய பானம் இந்த புதினா பானகம் (Panakam / Panagam). உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் பானம். ராம நவமிக்கு தயரிக்கக்கூடியது. மேலும் வயிற்றில் வரக்கூடிய தொந்தரவுகளை போக்கும். உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை அளிக்கும். மற்றொரு எளிய முறை பானகம் செய்முறையை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ½ எலுமிச்சை
- சிறிது சுக்குப்பொடி
- 2 ஏலக்காய்
- இரசாயனம் சேர்க்காத வெல்லம்
- 3 புதினா இலைகள்
செய்முறை
- வெல்லத்தை பாகு காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
- ஒரு கப் தண்ணீரில் சுக்குப்பொடி, ஏலக்காய் தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
- இதனுடன் தேவையான அளவு வெல்லப்பாகினை சேர்த்துக்கொள்ளவும்..
- இதில் கசக்கிய புதினா இலைகளை தூவி அருந்தவும்.
- வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தீர்க்கக்கூடிய இந்த பானகம் உடலை சுறுசுறுப்பாக்கும்.
பானகம்
சிறந்த ஒரு ஆரோக்கிய பானம் இந்த புதினா பானகம். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் பானம்.