எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்.
ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
உறவும் பாசமும் உதட்டோடே.
உதடு வெல்லம் உள்ளம் கள்ளம்.
எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்.
ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
உறவும் பாசமும் உதட்டோடே.
உதடு வெல்லம் உள்ளம் கள்ளம்.
கபடச் சொல்லைவிட கடிய சொல்லே மேல்.வாக்கும் மனசும் ஏத்து வார்த்தை சொல்ல வேண்டும்.கட்டி அழுகிற போது கையும் துழாவுமாம்.
கெண்டையைப்போட்டு விராலை இழுக்கிறதுபோல.கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.
துப்புக்கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு.பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறாள்.மாடு கிழம் ஆனாலும் பாலின் சுவை போகுமா?
தான் இருக்கிற அழகுக்கு தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை.திகைப்பூண்டு மிதித்து திக்கு கெட்டாற்போல்.உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.