படிகாரம் பயன்கள்

நீரை சுத்திகரிக்க அந்தக்காலத்தில் படிகாரம் பயன்பட்டது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் படிகாரம் பார்க்க ஐஸ்கட்டி போல இருக்கும். இதன் சுவை உப்பு துவர்ப்பாக இருக்கும். அதேப்போல் முடிதிருத்தும் நிலையங்களிலும் இதனைப் பார்க்கலாம். சவரக்கத்திப் பட்டு இரத்தம் வருவதை நிறுத்தவும் பயன்படுத்துவார்கள்.

விலை குறைவாக இருக்கும் இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி, நாமும் வீட்டில் வைத்திருப்பது நல்லது. பல வகைகளில் பயனையும், மருத்துவத்தையும் அளிக்கும்.

தலைப் பேன் ஒழிய

தண்ணீரில் படிகாரத்தைக் கரைத்து அத்துடன் மூக்குத்தூளைப் போட்டுக் கலந்து, தலையில் நன்றாகத் மயிர்க் கால்கள் வரை தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பின் சீயக்காய் தேய்த்துத் தலை முழுகப் பேன் ஒழியும்.

பற்களுக்கு

பற்களில் ஏற்படும் கரையை நீக்க படிகாரம் பயன்படும். படிகரத்தை பற்பொடியாக மற்ற கூட்டுப்பொருட்கள் சேர்த்து தயாரித்து பயன்படுத்தலாம்.

மூக்கில் இரத்த நிற்க

மூக்கில் இரத்தம் வருவதை நிறுத்த படிகாரம் உதவும். படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து, மூக்கின் மேலும் மூக்கின் உள்ளும் தடவ இரத்தம் வருவது நிற்கும்.

இரத்தக் கட்டு கரைய

இரத்தக் கட்டிற்கு படிகாரம் சிறந்த பலனை அளிக்கும். படிகாரம் தேவையான அளவு எடுத்து அதே அளவுக்குப் புற்று மண் சேர்த்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் விட்டு மை போல் கரைத்து இரத்தக் கட்டு உள்ள இடத்தில் பற்றுப் போட உடனடியாக
குணம் தெரியும்.

இரத்தக் காசம் தீர

இரத்தக் காசத்திற்கு படிகாரத்தை பயன்படுத்த நல்ல நிவாரணத்தை பெறலாம். படிகாரத்தைத் தூளைக் கொண்டு மருந்து தயாரித்து சிறு துளியளவு காலை மாலை சாப்பிட்டுவரக் விரைவாக இரத்தக் காசம் தீரும். காலையில் சாப்பிட்டப் பின் பாசிப்பயறைக் கொண்டு சூப்பு தயாரித்து சாப்பிடுவது சிறந்த பலனை அளிக்கும்.

பெரும்பாடு

பெண்களின் பெரும்பாடு நீங்க படிகாரம் உதவும். படிகரத்தை மருந்தாக தயரித்து சிறிதளவு எடுத்து 7 நாள் காலையில் மட்டும் சாப்பிடக் விரைவில் பெரும்பாடு நீங்கும்.

கக்குவான் இருமலுக்கு

படிகாரத்தை தூள் செய்து தேன், பெருங்காயம் கலந்து மருந்தாக தயாரித்து 3 நாட்கள் கொடுக்கக் கக்குவான் இருமல் நீங்கும்.

கண் வலி

கண்வலிக்கு படிகாரம் சிறந்த பலனை அளிக்கும். படிகாரத் தூளைக் கொண்டு திரவம் தயாரித்து ஓரிரு துளிகள் கண்ணில் விடக் கண்வலி நீங்கும். மேலும் அழகுக்கும் இதனை பயன்படுத்துவதுண்டு.

(4 votes)