பச்சை கற்பூரம்

பணம், பெருமை, அந்தஸ்து, புகழ், உணவு, அழகு என பல விஷயங்களுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க அனைவருக்கும் முக்கியமானது இரண்டு விஷயங்கள்.. ஒன்று இனிமையானது மற்றொன்றோ சற்று கவலையை கொடுக்கக் கூடியது.. அதாவது ஒன்று அன்றாடம் உட்கொள்ளும் உணவு மற்றொன்று உடலில் ஏற்படும் நோய்கள்.

உணவு என்றதும் அனைவருக்கும் அதன் சுவை முதலில் நினைவிற்கு வரும்.. ஒவ்வொரு நாளும் உணவை மூன்று வேளையும் உண்டு வந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன் உண்ட உணவின் சுவை மறக்காமல் பலருக்கு நாவில் இருப்பது அதிசயம் இல்லை. அந்த அளவு உணவும் உணவின் சுவையும் முக்கியத்துவம் பெறுகிறது..

எவ்வாறு சுவைக்கு பிரியர்களாகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறோமோ அதே போல் அனைவருக்கும் கவலை அளிக்கும் விஷயமாக இருப்பது உடலில் ஏற்படும் நோய்.

நோய் என்றதும் இன்று பலருக்கு பயம் ஏற்படுவதற்கு காரணம் நோயால் வரும் உடல் வலிகள். நவீன மருத்துவம் இந்த அளவு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் உடலில் ஏற்படும் வலிகளை மறத்துப் போக செய்யும் பல மருத்துவ முறைகள் இதில் உள்ளது என்பதால்.

அதெல்லாம் சரி இந்த இரண்டிற்கும் இப்பொழுது என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பச்சை கற்பூரத்தின் பயன்படும் அதன் தன்மைகளும் மனிதர்களுக்கு பல வகைகளில் உதவுகிறது.

நன்மைகள்

பச்சை கற்பூரம் என்றவுடன் பலருக்கும் நினைவிற்கு வருவது உணவில் அதனை சேர்க்க, அதன் சுவை கூடும் என்பது. ஆம், இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுதும் பல இனிப்பு உணவிற்கும், இனிப்பு தின்பண்டங்களுக்கும் சுவையைக் கூட்ட பயன்படுத்திய ஒரு பிரத்தியேகப் பொருள் பச்சை கற்பூரம்.

உணவில் மட்டும் தான் இதனை பயன்படுத்தினரா என்றால் மருத்துவத்திலும் இதனை பயன் படுத்தினர் என்பது இன்னும் ஆச்சரியமான விஷயம். உடலில் ஏற்படும் வலிகள், எரிச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த பச்சை கற்பூரம் இருந்திருக்கிறது.     

பச்சை கற்பூரம் நல்லதா? என்ற கேள்வி பெரும் பாலும் அனைவரின் மனதிலும் இருக்கிறது, காரணம் அதன் பயன்பாட்டினால் ஏற்படும் பின்விளைவுகள்.

பூர்வீகம்

பச்சை கற்பூரம் என்பது சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் விளையும் ஒருவகை கற்பூர மரத்தின் கட்டையில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். அதாவது இயற்கையாக எந்த பக்குவமும் அடையாத மரப்பட்டையிலிருந்து கிடைக்கக் கூடியது.

பின்விளைவுகள்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு‘.. குழந்தையாக இருக்கும் பொழுதே படித்திருப்போம். ஆனால் பல நேரங்களில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. இந்த பழமொழி நூற்றிற்கு நூறு சதவீதம் உண்மையாக இருக்கிறது நமது பச்சை கற்பூரத்தில்.

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட பச்சை கற்பூரம் பல நல்ல குணங்களை கொண்டுள்ளது, சுவையாக இருந்தாலும் சரி உடல் வலியாக இருந்தாலும் சரி அளவோடு ஒரு மில்லி கூட மிகாமல் சேர்க்க நல்ல பலனைக் கொடுக்கும். அளவு மிஞ்சினால், ஏன்.. உடலில் வலிக்காக தேய்க்கும் பொழுது அந்த இடத்தில் ஏதேனும் வெடிப்போ அல்லது அளவு மிஞ்சினாலோ பக்க விளைவுகள் ஏராளம்.

மொத்தத்தில் பச்சை கற்பூரம் ஒரு மருந்து. மருந்தை மருந்தாக பயன்படுத்த பல நன்மைகள் உள்ளது.

மேலும் இன்று சந்தைக்கு வரும் பல பச்சை கற்பூரம் இயற்கையாக மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் பச்சை கற்பூரம் இல்லை. பொதுவாக அளவோடு வலிநிவாரணியாகவும், சுவை கூட்டியாகவும் பயன்படுத்தும் பச்சை கற்பூரம் பல நல்ல குணங்களைக் கொண்டிருக்கிறது.

ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும் பல பச்சை கற்பூரம் இயற்கையானது கிடையாது. அவை பல இரசாயன வேதியல் மாற்றத்தால் உருவாக்கி விற்பனைக்கு வருகிறது. கைகளால் தொட சிறு கட்டிகள் போன்ற தன்மையுடன் இந்த செயற்கை பச்சை கற்பூரம் இருக்கும். இதனை கொண்டு எளிதில் இயற்கையானது அல்லது செயற்கையானது என்பதை கண்டுபிடிக்கலாம்.

இயற்கையான பச்சைக்கற்பூரத்தை அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தினாலே பல பின் விளைவுகளும், பக்க விளைவுகளும் ஏற்பட, செயற்கை பச்சை கற்பூரத்தால் எவ்வளவு பாதிப்புகள் விளையும் என்று சற்று சிந்தித்து பார்க்கவும். இதனை தவிர்த்து தரமான, உண்மையான இயற்கை பச்சை கற்பூரம் அளவோடு பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.

அதாவது வாழ்விற்கு தேவையான இரண்டு முக்கியமான சுவைக்கும், உடல் வலிக்கும் மாமருந்தாக அமைகிறது பச்சைக் கற்பூரம்.   

(11 votes)