அவுன்ஸ் / அவு. / அவுன்சு / ஔன்சு / ounce / oz என்பது மெட்ரிக் முறையை சேராத சிறு எடை அலகாகும். ஒரு அவுன்சு = 1/16 பவுண்டு. அதாவது, ஒரு பவுண்ட் நிறை எடையின் பதினாறில் ஒரு பங்கு அவுன்ஸ் என்பதாகும்.
முந்தைய காலத்தில் உலகின் பல நாடுகளில் இந்த முறை அளவீடு பயன்பாட்டில் இருந்தது. இன்று அமெரிக்க நாடுகள் சிலவற்றில் மட்டுமே பயன்பாட்டில் இந்த அவுன்ஸ் முறை உள்ளது.
பல நாடுகளில் பல முறைகளில் இந்த அவுன்ஸ் அளவிட்டை கொண்டுள்ளது. பொதுவாக ஏறத்தாழ இது 28.34 கிராம் எடை கொண்டதாக ஒரு அவுன்ஸ் இருக்கும்.
சரி, இனி ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ் என பார்க்கலாம். நம்மூரில் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள், மருந்துகளுக்கு நாம் இந்த அவுன்ஸ் முறையில் அளவீடு செய்து உட்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. ஒரு கப் என்பது 8 அவுன்ஸ் கொண்டது. அதாவது அரை கப் என்பது 4 அவுன்ஸ் அளவாகும்.