Terrace Garden, kitchen garden, gardening in tamil

மாவு பூச்சி / How to kill aphids on plants

வீட்டுத்தோட்டம் பராமரிப்பு குறிப்பு

வீட்டில் உள்ள தோட்டத்தில் இருக்கும் செடி, கொடிகளின் மீது அசுவினி பூச்சிகள் இருந்தால் இவற்றை செய்து பாருங்கள்..

Herbal Pesticide, Organic Pesticide, Natural pest, Organic Farming, Gardening Tips

சில இடங்களில் அல்லது ஓரிரு பூச்சிகள் இருந்தால்..

  • பூச்சியை விரல் அல்லது குச்சியால் நசுக்கி அப்புறப்படுத்தலாம்.
  • நிறைய பூச்சிகள் இருக்கும் பக்கத்தில் அவற்றை அவ்வாறு செய்ய முடியாதே என்ற கவலை வேண்டாம்.
  • இந்த முறையில் ஒன்று இரண்டு பூச்சிகளை கொல்வதால் வெளிப்படும் இரசாயன மணம் மற்ற பூச்சிகளை அங்கிருந்து வெளியேற்றிவிடும்.
  • பாதிக்கப்பட்ட ஒரு கிளை அல்லது பகுதியை கத்தரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடுங்கள் அல்லது சோப் கலந்த தண்ணீரில் போட்டுவிடுங்கள்.
  • வீட்டில் உள்ள தோட்டத்தில் பறவைகளின் வரவு இருந்தால் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். தோட்டத்தில் சில இடங்களில் பறவை கூடுகளை அமைக்கலாம். தட்டில் தானியம், தண்ணீர் வைத்தும் பறவைகளை வீட்டிற்கு வரவையுங்கள். பறவைகளுக்கு நீங்கள் உதவுங்கள் அவை உங்களுக்கு உதவும் !
  • வேகமாக தண்ணீரை பைப் மூலம் பீய்ச்சி அடிக்க அவை மறைந்துவிடும்.
  • காதி சோப் அதாவது இரசாயனம் இல்லாத மைல்டு சோப்பு கரைசலை தெளிக்கலாம். தண்ணீரில் கரைத்த உடன் உபயோகப்படுத்த வேண்டும்.
  • ஏதாவது மாவை சல்லடையில் போட்டு செடியின் மீது தெளிக்கலாம்.
  • வாழைப்பழத் தோலை துண்டுகளாக்கி செடிகளை சுற்றி மண்ணில் புதைத்து வைக்கலாம்.
  • இந்த முறைகள் எளிமையாக அசுவினி பூச்சியை விரட்டிவிடும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

1 thought on “மாவு பூச்சி / How to kill aphids on plants

Comments are closed.