வீட்டுத்தோட்டம் பராமரிப்பு குறிப்பு
வீட்டில் உள்ள தோட்டத்தில் இருக்கும் செடி, கொடிகளின் மீது அசுவினி பூச்சிகள் இருந்தால் இவற்றை செய்து பாருங்கள்..
சில இடங்களில் அல்லது ஓரிரு பூச்சிகள் இருந்தால்..
- பூச்சியை விரல் அல்லது குச்சியால் நசுக்கி அப்புறப்படுத்தலாம்.
- நிறைய பூச்சிகள் இருக்கும் பக்கத்தில் அவற்றை அவ்வாறு செய்ய முடியாதே என்ற கவலை வேண்டாம்.
- இந்த முறையில் ஒன்று இரண்டு பூச்சிகளை கொல்வதால் வெளிப்படும் இரசாயன மணம் மற்ற பூச்சிகளை அங்கிருந்து வெளியேற்றிவிடும்.
- பாதிக்கப்பட்ட ஒரு கிளை அல்லது பகுதியை கத்தரித்து எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அப்புறப்படுத்திவிடுங்கள் அல்லது சோப் கலந்த தண்ணீரில் போட்டுவிடுங்கள்.
- வீட்டில் உள்ள தோட்டத்தில் பறவைகளின் வரவு இருந்தால் இந்த பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். தோட்டத்தில் சில இடங்களில் பறவை கூடுகளை அமைக்கலாம். தட்டில் தானியம், தண்ணீர் வைத்தும் பறவைகளை வீட்டிற்கு வரவையுங்கள். பறவைகளுக்கு நீங்கள் உதவுங்கள் அவை உங்களுக்கு உதவும் !
- வேகமாக தண்ணீரை பைப் மூலம் பீய்ச்சி அடிக்க அவை மறைந்துவிடும்.
- காதி சோப் அதாவது இரசாயனம் இல்லாத மைல்டு சோப்பு கரைசலை தெளிக்கலாம். தண்ணீரில் கரைத்த உடன் உபயோகப்படுத்த வேண்டும்.
- ஏதாவது மாவை சல்லடையில் போட்டு செடியின் மீது தெளிக்கலாம்.
- வாழைப்பழத் தோலை துண்டுகளாக்கி செடிகளை சுற்றி மண்ணில் புதைத்து வைக்கலாம்.
- இந்த முறைகள் எளிமையாக அசுவினி பூச்சியை விரட்டிவிடும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு
Thank u