பயிர்கள் நல்ல வளர்சியையும் நல்ல மகசூலையும் பெற இயற்கை கலப்பு உரம் உதவுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கும் இந்த உரம் பயன்படுகிறது.
இயற்கை கலப்பு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்
நாட்டு மாட்டுச் சாணம் – ஒரு டன்
ஆட்டுப்புழுக்கை – ஒரு டன்
எரு – ஒரு டன்
இலை தழைகள் – ஒரு டன்
இயற்கை கலப்பு உரம் தயாரிக்கும் முறை
இயற்கை உரம் தயாரிப்பதற்கு இவை அனைத்தையும் அதாவது மாட்டுச் சாணம், ஆட்டுப்புழுக்கை, எரு, இலை தழைகள் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ள வேண்டும். இதுவே இயற்கை கலப்பு உரம்.
இவற்றை ஒன்றாக கலந்து தயார்செய்து நிலத்தில் இடலாம். இதனோடு மக்கும் அனைத்து குப்பைகள், சமையலறைக் கழிவுகள் என அனைத்து மக்கும் கழிவுகளையும் சேர்க்கலாம்.
நிலத்தை உழுவதற்கு முன் நிலத்தில் இட்டு பின் பயிர்களை பயிரிடலாம்.
இந்த இயற்கை கலப்பு உரத்தை மண்ணில் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கப்பெறும். இதில் மக்கும் அனைத்து பொருட்களும் சமமாக இருப்பதால் பயிர்களுக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகளும் எளிமையாக கிடைக்கும்.
இதனை மண்ணில் இடுவதால பயிர்கள் நன்கு வளரும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களையும் இது பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.