papaya leaf karaisal for pest in organic farming, orgainc-fertilizer, Plant Growth Promoter, Iyarkai Vivasayam, Pest Control, Kitchen Garden, Terrace Garden, Organic Manure

பப்பாளி இலைக் கரைசல்

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது பப்பாளி இலைக் கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

papaya leaf karaisal for pest in organic farming, orgainc-fertilizer, Plant Growth Promoter, Iyarkai Vivasayam, Pest Control, Kitchen Garden, Terrace Garden, Organic Manure

பப்பாளி இலைக் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்

50 கிராம் பப்பாளி இலைகள்
தண்ணீர்

பப்பாளி இலைக் கரைசல் தயாரிக்கும் முறை

50 கிராம் பப்பாளி இலைகளை நன்றாக வெட்டி 100 மிலி தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்துப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இதனுடன் இரண்டு அல்லது மூன்று லிட்டர் வரை தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தும் பூச்சி

கம்பளிப்புழு

இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.

இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(3 votes)

1 thought on “பப்பாளி இலைக் கரைசல்

  1. Nijam

    Well i am follow

Comments are closed.