ஆரஞ்சு பழம் என்ற உடனேயே கண்ணைப் பறிக்கும் அதன் நிறம்தான் நமக்கு நினைவுக்கு வரும். கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு பழம், பார்வைக்கும் அழகாக இருக்க கூடியது. பொதுவாக தமிழகத்தில் கமலா ஆரஞ்சு பழங்கள் அதிகமாக கிடைக்கும். இதனுடைய தோல் சற்று கடினமாக இருந்தாலும் தோலை உரிப்பது மிருதுவாகவும், சுலபமாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தின் தோலுக்கும் சுளைக்கும் பிடிப்பு இருக்காது. தோலை உரித்த உடன் சுளைகளையும் சுலபமாக பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்டதாக தித்திப்பாக இருக்கக்கூடியது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதே போல் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது சத்துக்களும் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த பழமாகவும் உள்ளது. குழந்தைகள் கண்பார்வையை அதிகரிக்க உதவும்.
அஜீரண வயிற்றுப்போக்கு குணமாக
தினசரி ஒரு ஆரஞ்சு பழம் வீதம் 40 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆரஞ்சு பழத்தைச் சாறு பிழிந்து தினமும் மூன்று நாட்களுக்குக் பருகி வர அஜீரண வயிற்றுப்போக்கு குணமாகும்.
தூக்கம் வர
இரண்டு அவுன்ஸ் ஆரஞ்சு பழச் சாற்றில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் கலந்து குடித்துவிட்டு படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
பல் நோய்கள் நீங்க
பல நோயினால் துன்பப்படுகிறவர்கள் காலையில் பல் துலக்கியதும் ஆரஞ்சு பழத்தை நன்றாக மென்று சாப்பிட்டு விழுங்கினால் பல் நோய் குணமாகும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்தாலே போதும் பல் வலி, பல் அரணை, எதிர் வீக்கம், வாய் நாற்றம், பல்லில் இரத்தம் வரும் நோய்கள் நீங்கும்.
கிருமி நாசினி
ஆரஞ்சு பழம் சிறந்த ஒரு கிருமி நாசினியாகும். அதனால் தொற்றுநோய் பரவாமல் இருக்க அடிக்கடி இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடவேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. தொற்றுநோயால் பரவக்கூடிய கிருமிகளை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு அற்புதமான பழம் இந்த ஆரஞ்சு பழம்.
சருமம் பளபளக்க
தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை உண்பதால் சருமம் பளபளப்பாகும். முகம் பொலிவு பெறும்.
குளியல் பொடி
பழத்தை உண்டபின் ஆரஞ்சு பழத்தின் தோலை வீணாக்காமல் நிழலிலுலர்த்தி, காய்ந்ததும் அதனுடன் பச்சைபயறு சேர்த்து அரைத்தால் ஒரு அற்புதமான அதேசமயம் எளிமையான குளியல் பொடி தயாராகிவிடும். இந்த குளியல் பொடியை கொண்டு அன்றாடம் குளித்துவர சருமத்தில் வரக்கூடிய கட்டி, பருக்கள், கருங்திட்டுகள் போன்ற பிரச்சனைகள் நீங்கும். முகம் பொலிவு பெறும், உடல் புத்துணர்வு பெரும்.