கீழுள்ளவற்றை தொலைத்த நாம் அதனுடன் சேர்த்து நமது ஆரோக்கியத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம். கூடவே நமது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் தொலைத்தோம். நாம் தொலைத்த சில உணவுகளை நினைவுபடுத்துவோம்.
- மிருதுவான தோல்கள் கொண்ட புளிப்புத் தக்காளியைக் காணோம்,
- கசக்கும் பாகற்காயைக் காணோம்,
- மணக்கும் மல்லியைக் காணோம்,
- மணக்கும் பச்சை இரத்தமான கீரைகளைக் காணோம்,
- மிளகுக்கும் பப்பாளி விதைக்கும் வேறுபாடே இல்லாதளவு காரத்தை காணோம்,
- ஊருக்கே மணக்கும் முருங்கையைக் காணோம்,

- கார்க்கும் கத்திரியைக் காணோம்,
- கார்க்கும் முள்ளங்கியைக் காணோம்,
- கண்களைக் கலங்க வைத்த மா மருந்தான வெங்காயத்தைக் காணோம்,
- தட்டிப் போட்டு மணந்த பூண்டைக் காணோம்,
- இனிப்பும் கசப்பும் கலந்த தேனைக் காணோம்,
- இனிக்கும் கரும்பைக் காணோம்,
- உடலுக்கு திடத்தைக் கொடுக்கும் கேழ்வரகைக் காணோம்,
- சின்னச் சின்ன மணியாக இருக்கும் சிறு பருப்பைக் (பாசிப் பருப்பு) காணோம்,
- சத்துக்களை வாரிவழங்கிய நம் மரபு தானியங்களை காணோம்,
- கசக்கிப் போடும் சீரகத்தைக் காணோம்,
- சுவைக்கும் வாழைப் பழத்தைக் காணோம்,
- இனிப்பு, உப்பு, புளிப்பு கலந்த சாத்துக்குடி, கமலா ஆரஞ்சை காணோம்,
- மருத்துவ குணம் கொண்ட நல்லெண்ணெய்யைக் காணோம்,
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கடுகைக் காணோம்,
- இரத்த சோகையைப் போக்கும் இனிப்பு கருப்பட்டியை காணோம்,
- சத்துக்களின் ஊட்டச்சத்து ராணியான பாரம்பரிய அரிசியைக் காணோம்… இப்படி உண்மைத் தன்மை கொண்ட உணவுகள் காணமல் போனதுடன் மறந்து போய்விட்டது.
உண்மை. தக்காளி கத்தியால் நறுக்க முடியாத அளவுக்கு அதன் தோல் உள்ளது
நாம் இப்போதிருக்கும் நிலையில் உணவே மருந்து என்பதை மறந்து விட வேண்டும்
உண்மை. நாம் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.