எண்ணெய் கொப்பளித்தல் / Oil Pulling

ஆட்டம்பாமைக் கண்டு பயப்படாத நம்மவர்கள் ஆயிலைக் கண்டு அலறுவது கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளாக அரங்கேறும் கூத்தாகத்தான் உள்ளது.

ஆயில் என்ற ஒற்றைச்சொல்லின் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் இன்று மறைக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.

சர்க்கரை வியாதி இருக்கு, உடலுக்கு இனிப்பு கூடாது என்பவர்கள் கூட ஆசையாக இனிப்பை திருடியாவது திண்பார்கள்.. ஆனால் நொறுக்குதீனிகளின் மீதும், பொரித்த உணவின் மீதும் எப்பேர்ப்பட்ட ஆசை இருந்தாலும் எண்ணெயை கண்டால் உள்ளுக்கும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது, அந்த உணவுகளை விருப்பத்தோடு உட்கொள்ள பலருக்கு இயலவில்லை.

அப்படிப்பட்ட வில்லனா என்ன இந்த எண்ணெய்?

நிச்சயம் இல்லை.. எந்த எண்ணெயை.. எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமும் அக்கறையும் தேவை.

இன்றைய தலைமுறையினர் தான் எண்ணெயைக் கண்டால் இப்படி பயப்படுகின்றனர். நமது முன்னோர்களோ எண்ணெயிலேயே குளித்தனர். 

வாரம் ஒரு முறையோ இரண்டு முறையோ உச்சந் தலை முதல் உள்ளங் கால் வரை எண்ணெய்க் குளியல், அதிலும் முக துவாரங்களில் உடலைக் குளிர்விக்கவும், உடல் உறுப்பை குளிர்விக்கவும் எண்ணெய்யைக் கொண்டு சில பயிற்சிகள் செய்வது என்பதெல்லாம் வாடிக்கையாகத்தான் இருந்தது. அப்படி பட்ட ஒன்று தான் தொண்டை சுத்தம் செய்வது என்ற முறை. இந்த முறை இன்று மருவி ஆயில் புல்லிங் என்று நவீன மயமாக்கப்பட்டுள்ளது. 

ஆயில் புல்லிங் / எண்ணெய் கொப்பளித்தல்

ஆயில் புல்லிங் என்ற எண்ணெய் கொப்பளித்தல் முறையில் பல பல நன்மைகள் உள்ளது. எண்ணெய் கொப்பளித்தல் என்பது வாயில் எண்ணெயை ஊற்றி சாதாரணமாக நீரைக் கொண்டு கொப்பளிப்பது போல் கொப்பளிப்பது.

இவ்வாறு செய்வதினால் உடலில் பல தொந்தரவுகளில் இருந்து வெளியேறலாம். குறிப்பாக சளி, வாய் புண், வாய் துர்நாற்றம், அலர்ஜி, தூக்கமின்மை, அஸ்மா, வயிற்றுவலி, வயிற்று தொந்தரவும், வியர்வை தொந்தரவுகள், சோம்பேறித்தனம், வாயு தொந்தரவு, மூட்டுவலிகள், கருப்பை தொந்தரவுகள், தலைவலி, தைராய்டு, பல் தொந்தரவுகள், இரத்த அழுத்தம், ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு, பொலிவான சருமம், பல் கறை என பல பல நோய்களையும், தொந்தரவுகளையும் பட்டியலிடலாம். 

எண்ணெய் கொப்பளித்தலினால் எவ்வாறு இந்த தொந்தரவுகளில் இருந்து வெளியேறலாம் என்று தோன்றுகிறதா?

உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு காரணம் சீரான உணவு பழக்கமின்மை என்று ஒரே வரியில் சொல்வது போல் இந்த எண்ணெய் கொப்பளித்தலால் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வாயில் உள்ள உமிழ்நீரின் துணையுடன் கணிசமான அளவில் வெளியேற்றலாம்.

உணவினை சீராக ஜீரணிக்க உதவும் உமில்நீரை எண்ணெய் கொப்பளித்தலின் மூலம் அதிகரிக்க செய்து இரத்தத்திலும் உடலில் உள்ள உறுப்புகளின் மூலமும் கழிவுகளை வெளியேற்றலாம்.

இவ்வாறு செய்வதால் கழிவுகளை வெளியேற்றும் வேதி பொருட்கள் நமது எச்சிலுடன் சேர்ந்து எண்ணெய் கொப்பளித்தலில் வெளியேறும்.

இதனால் நேரடியாக வாய், உதடு, நாக்கு, தொண்டை போன்றவை பலன் பெறுவதைப் போல உள் உறுப்புகளும், இரத்தமும் நச்சுக்களை வெளியேற்றி சுறுசுறுப்படையும். 

எண்ணெய் கொப்பளித்தால் என்றால் என்ன? எவ்வாறு செய்வது? 

எண்ணெய் கொப்பளித்தால் என்பது வாயினில் பத்து மில்லி அளவு சுத்தமான செக்கு நல்ல எண்ணெய் (எள் எண்ணெய்) அல்லது சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனை பதினைந்து முதல் இருபது நிமிடம் வாயில் நன்கு பற்களுக்கு இடையிலும், மேல் அன்னம் முதல் தொண்டை வரை செல்லும் படி கொப்பளிக்க வேண்டும். நன்கு கொப்பளித்த பின் எண்ணெய்யானது நுரைத்து நீர்த்து வெள்ளையாக மாறியிருக்கும்.   

நமது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும், நமது உடல் பழக்கப்பட்ட சுத்தமான செக்கு நல்லெண்ணெய் அல்லது சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்க்கு கொண்டு செய்யவேண்டும்.

எண்ணெய் கொப்பளித்தலை எவ்வளவு நேரம் எதை கொண்டு செய்வது?

எண்ணெய் நீர்த்து நுரைத்து வெள்ளையாகும் வரை செய்ய வேண்டும். குறைந்தது 10-15 நிமிடமும் முதல் 20 நிமிடம் செய்ய எண்ணெய் நீர்த்து போகும். 

ஏன் இந்த எண்ணெய் கொப்பளித்தலை செய்ய வேண்டும்?

  • எண்ணெய் கொப்பளித்தலை செய்வதனால் உடலில், வாயில், இரத்தத்தில் மற்றும் நமது உமிழ்நீரில் உள்ள கெட்ட கிருமிகள், வயிற்றுக்கு, பெருங்குடலுக்கு தொந்தரவு அளிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றும்.
  • உடல், இரத்தம் தூய்மையாகும்.
  • பற்கள், ஈரலில் உள்ள கெட்ட கிருமிகள் வெளியேறும். வாய், வயிறு, வியர்வை துர்நாற்றம் அகலும்.
  • உடல், முகப் பளபளப்பிற்கு மற்றும் எலும்பு மஜ்ஜைகளுக்கு இடையில் தேவைப்படும் வளவளப்பினைக் கொடுக்கும். தேவையற்ற கொழுப்பினை நீக்கி உடல் பருமனை போக்கும்.
  • பத்து நிமிடத்திற்கு மேல் செய்யும் பொழுது உடலில் பலமுறை இரத்தம் சுற்றிவர பலபல தீய கிருமிகளை அது வெளியேற்றும். பல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சோம்பல் அகலும். 
  • பலபல ஜீரண சுரப்பிகளையும் ஜீரண நீரினையும் உற்பத்தி செய்யும்.
  • உணவு சீராக சீரணமாக உதவும்.
  • அஜீரணம், மலச்சிக்கல் மறையும்.

எப்போது எண்ணெய் கொப்பளித்தல் செய்ய வேண்டும்?

அதிகாலையில் குறைந்தது ஏழு மணிக்குள் எண்ணெய் கொப்பளித்தல் செய்வது நல்ல பலனைத் தரும். உடலில் உள்ள கழிவுகளான மல ஜலம் நீங்கும் நேரமான காலையில் செய்வது நல்லது.

பற்களை துலக்குவதற்கு முன் எண்ணெய் கொப்பளித்தல் செய்ய வேண்டும். எண்ணெய் கொப்பளித்தலுக்கு பின் இரண்டு மூன்று முறை வாயினில் நீரினை விட்டு நன்கு கொப்பளிக்க வேண்டும். பின் எந்த இரசாயனமும் இல்லாத பற் பொடியை கொண்டு பற்களையும், ஈறுகளையும் தேய்த்துவிட்டு பற்களை துலக்க வேண்டும்.

உடலில் இருக்கும் தொந்தரவுகளுக்கும், உணவிற்கும் ஏற்ப வாரம் ஒருமுறை அல்லது அன்றாடமும் இந்த எண்ணெய் கொப்பளித்தல் செய்யலாம். 

தேவைக்கேற்ப ஒரு நாளில் மூன்று முறையும் செய்யலாம். உணவிற்கு முன் வெறும் வயிற்றில் மட்டுமே இதனை செய்ய வேண்டும். 

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

உடலில் உள்ள தொந்தரவுகள் குறையும் வரை செய்வதும் அதாவது முதலில் இரண்டு மாதங்கள் காலையில் செய்வதும், பின் வாரம் ஒரு முறை செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

(2 votes)