வாத தேகத்திற்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

கடலை எண்ணெய்

கடுமையான வாசத்தை கொண்டிருக்க கூடிய ஒரு எண்ணெய் இந்த கடலை எண்ணெய். மற்ற எண்ணெய்களை கடலை எண்ணெயுடன் சேர்த்தாலும் அதனுடைய சொந்த வாசம் அதிகமாகவே இருக்கும். வாதத்தை குறைக்கும், கபம் பித்தத்தை கூட்டும் எண்ணெய்.

நல்லெண்ணெய்

வறண்ட சருமத்திற்கு ஏற்றது. சக்தியை கொடுக்கக் கூடிய பாதுகாப்பான ஒரு எண்ணெய். சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்களை அதிக அளவில் தடுக்கும் ஆற்றல் கொண்டது நல்லெண்ணெய். வாதத்தை குறைக்கும் பித்த கபத்தை கூட்டும்.

ஆமணக்கு எண்ணெய்

மலச்சிக்கலுக்கு நல்லது. மூட்டு வலி, தசை வலிகளை நீக்கும். நிணநீரை ஊக்குவிக்கும். வாத கபா தோஷங்களை குறைக்கும். பித்தத்தை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்

குளுமையானது கொடுக்கக்கூடியது. சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும். எந்த கலப்படமும் இல்லாத நிலையில் நிறமற்ற ஒரு எண்ணெய். பித்தத்தை குறைக்கும், கபத்தை கூட்டும். வாதத்தை சமம் செய்யும்.

சூரியகாந்தி எண்ணெய்

குளுமையான சத்துக்களை கொண்டது. உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு சிறந்த குணமளிக்கும். பித்த கப தோஷங்களை குறைக்கும். வாதத்தை சமன் செய்யும்.