ஒதிய மரம் – நம் மூலிகை அறிவோம்

odina wodier; ஒதிய மரம்; உதிய மரம்

  • ஒதிய மரத்தின் இலையை அரைத்து ஆனைக்கால் நோய்க்கும் பற்றாக இட விரைவில் பலன்கிடைக்கும்.
  • ஒதிய மரத்தின் இலைகளை மைய அரைத்து சுளுக்குள்ள இடங்கில் பற்றிட சரியாகும்.
  • ஒதிய மரத்தின் இலையை நெருப்பில் வாட்டி உடலின் வீக்கம் மற்றும் வலியுள்ள இடங்களில் வைத்து கட்டி குணப்படுத்தலாம்.

  • அயத்தூலை சுத்தி செய்து, ஒதிய மர பட்டையை காடி தெளித்து இடித்தெடுத்த சாற்றிணால் நான்கு சாமம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து ஐந்து சிலைமன் செய்து கெச புடமாக எட்டு புடமிட்டு எடுக்க நூறு புடமிட்ட அய செந்தூரத்திற்கு மேலான தரத்தைக்கொண்டிருக்கும், இச்செந்தூரத்தை 48 நாட்கள் ஒரு மண்டம் சாப்பிட. உடல்முருக்கேரி யானை பலமும், அருணனை ஒத்த அழகும் உண்டாகும், மூன்று நாடிகளும் சமநிலை அடைந்து கற்பநிலை தேகத்தைப்பெறலாம். சரியாக செய்த செந்தூரம் முருக்கன் பூ நிறத்திலிருக்கும்.
  • இந்த மரத்தின் பட்டைச் சாறை புண்கள் மற்றும் வீக்கம் முதலியவற்றின் மேல் விட சரியாகும். உடலில் ஏற்படும் வீக்கங்களை அகற்றும்.
  • பட்டைச் சாற்றினை பெண்களின் பெரும்பாடு மற்றும் ஆண்களின் சிறுநீர்த்தாரையில் இரத்தமாக போவதனையும் குணப்படுத்தும்.

மேலும் பல மூலிகைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு இணையலாம்.

(6 votes)