நொச்சி தைலம்

மூட்டு வலி, கழுத்து வலி, மண்டைப் பிடி, தலைவலி, உடல் வலி என சகல வலிகளுக்கும் சிறந்த தைலம் நொச்சி தைலம். இதனை எளிதாக வீட்டில் தயாரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது பயன்படுத்த நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதிக அலைச்சல் மற்றும் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றத்தினால் வரக்கூடிய மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் அற்புத தைலம் இது.

இதனை தயரிக்க கொழுந்து நொச்சி இலைகளை பயன்படுத்துவது சிறந்தது. இதனுடன் கஸ்தூரி மஞ்சள், மிளகு ஆகியவற்றையும் சேர்த்து தயாரிக்க நல்ல பலனை பெறலாம்.

நொச்சி தைலம் தயாரிக்க

  • கொழுந்து நொச்சி இலைகள் – 100 கிராம்
  • மிளகு – 50 கிராம்
  • பசும் பால் – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்

நொச்சி தைலம் தயாரிக்கும் முறை

நொச்சி இலைகள், மிளகு ஆகியவற்றை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதனை நல்லெண்ணெயில் சேர்த்து நன்கு மெழுகுப் பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

இந்த தைலத்தை மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வர மூட்டுவலி, கழுத்துவலி, தலைவலி போன்றவை தீரும். உடலில் ஏற்படும் கட்டிகள், நெறி கட்டிகள், வீக்கங்களுக்கும் சிறந்த நிவாரணத்தை அளிக்கும்.

தலைவலிக்கு இந்த தைலத்தை தலையில் தேய்க்க நல்ல பலனை பெறலாம். முடி உதிர்வு போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது. நரம்பு சார்ந்த பிரச்சனைகள், சருமம், கண்களில் வரக்கூடிய தொந்தரவுகளுக்கும் இந்த தைலம் சிறந்தது.

அதிக புளிப்புள்ள உணவுகளை தவிர்ப்பது நல்ல பலனை அளிக்கும். முடக்கு வாதம், வாத நோய்களுக்கும் நல்ல பலனை இந்த நொச்சி தைலம் அளிக்கும்.

(1 vote)