நொச்சி எங்கும் கிடைக்கக்கூடிய ஒரு செடி. சில இடங்களில் மரம் போல ஆறடி ஏழடி உயரம் கூட வளர்ந்து இருக்கும். இதன் இலை மாவிலை வடிவத்தில் ஆனால் மிக சிறிய அளவில் இருக்கும். இந்த நொச்சி இலை மருந்தாக பல வகைகளில் பயன்படுகிறது. இலை வெளிறின பச்சையாக சாம்பல் படர்ந்தது போல் இருக்கும். இலை மருந்து வகைகள் நிறைய பயன்படும். பெருமளவில் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள், சுவாசம் சார்ந்த பாதிப்புகள், மூச்சுத்திணறலுக்கு சிறந்த பலனளிக்கிறது.
இந்த நொச்சி இலைகளை வேப்பிலையுடன் சேர்த்து நீரில் கொதிக்கவிட்டு ஆவி பிடிக்க தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள் அகலும், கிருமிகள் அழியும்.
மூட்டு வீக்கம்
மூட்டு வீக்கத்திற்கு துர் நீர் சம்பந்தமாக மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம், தாங்க முடியாத வலி உண்டாக்கும் உண்டாக்கும். இதற்கு நொச்சி இலையை ஒருசட்டியில் போட்டு அது வதக்கி வரும் சமயம் அதனுடன் கொஞ்சம் வேப்பெண்ணையை விட்டு நன்றாக வதக்கி இறக்கி வைத்து பொறுக்கும் சூட்டில் எடுத்து வீக்கத்தின் மேல் வைத்து அதன் மேல் வெற்றிலை வைத்து இறுகக் கட்டி விட வேண்டும். தினசரி காலையில் கட்டவிழ்த்து துடைத்து விட்டு புதிய இலை வைத்துக் கட்ட வேண்டும். மூன்றே நாளில் வீக்கம் வாடிவிடும்.
நொச்சிக் கஷாயம்
சகல மாந்தத்திற்கும் நொச்சிக் கஷாயம். நொச்சி இலை, சீந்தில் கொடி நுணா இலை, துளசி, கஞ்சாங்கோரை வகைக்கு கைப்பிடியளவு எல்லாம் சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சுண்ட விட்டு அரை டம்ளர் வந்ததும் வடிகட்டி காலை மாலை சுகமாகும் வரை கொடுக்க வேண்டும். வயிற்று உப்புசம் வயிற்றுப் போக்கு குணமாகும்.
கை கால் உடல் வலி குணமாக
ஒரு பானைத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் 2 கைப்பிடி அளவு நொச்சி இலையையும் ஒரு கைப்பிடி அளவு தாழை இலையையும் கிள்ளிப் போட்டு தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து பிறகு ஆற விட்டு அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். இந்த முறையில் மூன்று நாள் குடித்தால் உடல்வலி குணமாகும்.