Welcome to HealthnOrganicsTamil !!!

நரம்பு தளர்ச்சி குணமாக

வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் இன்று பல குழந்தைகளும் நரம்பு சம்மந்தமான தொந்தரவுகள் அதிகரித்துள்ளது. இதனை போக்கி உடல் பலத்தை அதிகரிக்கவும் நரம்புகளை வலுபடுதவும் சில வழிகளையும், எளிய வீட்டுக் குறுப்புகளையும் இங்கு தெரிந்துக் கொள்ளலாம். இந்த குறிப்புகள் எளிமையானது தான் ஆனால் இதன் வீரியம் அதிகமானது. இவற்றை சீராக பின்பற்ற விரைவில் நல்ல பலனை பெறலாம். மேலும் இந்த குறிப்புகள் உடலுக்கு வலுவையும் பலத்தையும் அளிக்கும். நரம்புகளையும் மூளையையும் பலப்படுத்தும் சில வழிமுறைகளையும் மூளை பலம் பெற என்ற பதிவிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

அத்திப்பழம்

அத்திப் பழத்தை அன்றாடம் உண்டு வருவதால் நரம்புத்தளர்ச்சி விரைவாக நீங்கும். அதிலும் அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து அன்றாடம் உண்பது சிறந்த ஒரு பலனை அளிக்கும். (குறிப்பு : அத்திப்பழம் என்பது நாட்டு ரக அத்திப்பழமாக இருப்பது அவசியமானது).

மாதுளை

நரம்புகளுக்கு வலுவூட்டும் ஒரு அற்புத பழம் மாதுளம் பழம். அன்றாடம் மாதுளம் பழத்தை உண்பது நரம்புகளுக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு பல வழிகளில் பயனையும் நன்மையையும் அளிக்கும். மாதுளம் பழ சாறினை தேன் கலந்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் உட்கொள்ள எப்பேர்பட்ட நரம்புத் தளர்ச்சியும் நீங்கும்.

லச்சக்கொட்டைக் கீரை

அவ்வப்போது உணவில் லச்சக்கொட்டைக் கீரையை சேர்த்து சாப்பிட விரைவாக நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

கீரைகள் / பழங்கள்

வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள், கீரைகளை அன்றாடம் உண்பது அவசியமானது. முருங்கை கீரை, முருங்கை ஈர்க்கு, வெந்தயக் கீரை ஆகியவை நரம்பு தளர்ச்சியை போக்க கூடியது சிறந்த கீரைகள்.

தேங்காய்

தேங்காய்க்கு நரம்புகளில் ஏற்படும் தொந்தரவுகளையும், வலிகளையும் போக்கும் தன்மை உண்டு. அதனால் அன்றாடம் பச்சையாக புது தேங்காயை சிறிதளவு உண்பது நல்ல பலனை அளிக்கும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பை ஊறவைத்து அன்றாடம் ஐந்து முதல் ஏழு பாதாம் பருப்புக்களை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். நரம்புகளை பலப்படுத்தும் ஒரு அற்புதமான கொட்டைப்பருப்பு பாதாம்.

அரிசி

அன்றாட உணவில் பிரதானமான இடத்தை பிடிக்கும் முக்கியமான தானியம் அரிசியும் சிறுதானியமும். அந்த வரிசையில் நரம்புகளுக்கு பலமளிக்கும் அரிசியில் மிக முக்கியமானது மாப்பிள்ளை சம்பா அரிசியும், கருங்குறுவை அரிசியும். அதேப்போல் சிறுதானியங்களில் கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவையும் நரம்புகளை பலப்படுத்தும்.

தயிர்

நமது உணவில் அன்றாடம் தயிரை சேர்த்து உண்பது நரம்புகளுக்கு பலமளிக்கும்.

துளசி விதைகள்

நரம்பு வலிக்கு சிறந்த ஒரு மருந்து துளசி விதைகள். துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட விரைவாக நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் நரம்பு வலி நீங்கும்.

5/5 - (1 vote)
சிந்தனை துளிகள் :

அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!