பழஞ்சோறு எவ்வாறு தயாரிப்பது?

ஆரோக்கியமான பழைய சோறு தயாரிக்க குக்கரை தவிர்த்து மண்சட்டியை பயன்படுத்துவது சிறந்தது. எந்த செலவும் இல்லாமல் இழந்த உடலை எளிதாக திரும்பப் பெற சிறந்த சமையல் பாத்திரம் மண்பாண்டம்.

மண்சட்டியை காஸ் அடுப்பில் வைத்து நீர் ஊற்றி முதலில் நீர் நன்கு சூடாகி கொதி நிலை வரும் முன் ஏதேனும் பாரம்பரிய அரிசியை (கிச்சிலி சம்பா, தூயமல்லி, கருடன் சம்பா, கருங்குறுவை, காட்டுயானம், பூங்கார், மாப்பிள்ளை சம்பா போன்ற வகைகள் பயன்படுத்தலாம்) நீருடன் சேர்த்து வேகவிடவும்.

வெந்ததும் கஞ்சியை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். தேவையான உணவை வேண்டுமானால் உண்ணலாம் அல்லது சாதம் சற்று ஆறியவுடன் சிறிது வடித்த காஞ்சியுடன் நீர் சேர்த்து வைக்கவும்.

மறுநாள் காலை பிரமாதமான மணத்துடன் நீராகாரம் தயார். இதன் தண்ணீரை மட்டும் எடுத்து காலையில் பருகலாம் அல்லது நன்கு கைகளால் கரைத்து சின்ன வெங்காயத்துடன் அருந்துவது சிறந்தது. ஏதேனும் கூட்டு, துவையல் அல்லது காய்கறி சேர்த்து உண்ணலாம்.

சுவைக்காக பசும் மோர் சேர்க்கலாம், பசும் மோர் கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பால் மோர் கலந்து சிறிது உப்புடன், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை கலந்து பருகலாம். முதல் நாள் தயாரிக்கும் பழஞ்சாதம் மறு நாள் மதியத்திற்குள் உண்பது உகந்தது.  

மேலும் கிச்சிலி சம்பா நீராகாரம், பூங்கார் அரிசி நீராகாரம், மாப்பிள்ளை சம்பா நீராகாரம்.