கோடைகாலத்தில் அதிகமாக பலரும் பாதிக்கப்படும் ஒரு தொந்தரவு நீர் கடுப்பு. எரிச்சல், வலி என நீர் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு எளிமையான சில வீட்டுக் குறிப்புகளையும், பாட்டி வைத்திய முறைகளையும் பார்க்கலாம். நீர் கடுப்பு மட்டுமல்லாமல் நீரடைப்பு, எரிச்சல், நீர்சுருக்கு,சிறுநீரக கோளாறுகளுக்குமான சில மூலிகைத் தீர்வுகளையும் பார்க்கலாம்.
ஒரு சிறு துண்டு நன்னாரி வேர் எடுத்து அரைத்து பசும்பாலுடன் பருகுவர எப்பேர்ப்பட்ட நீர்சுருக்கும், நீர் கடுப்பும் நீங்கும்.
பசும்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதாலும் நீர் சுருக்கு நீங்கும்.
மூக்கிரட்டை கீரை கசாயம் சீரகம் சேர்த்து தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு வேளை பருக நல்ல பலனைப் பெறலாம்.
நீரடைப்பு நீங்க
கோவை இலை கசாயத்தை குடித்து வர நீரடைப்பு நீங்கும்.
எரிச்சல் மறைய
செம்பருத்தி பூவை, பூசணி சாறுடன் சேர்த்து சாப்பிட எரிச்சல் மறையும்.
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறுடன் அரைத்து பனங்சர்க்கரை பாகில் கலந்து பருக எரிச்சல், நீர்கட்டு, ஈரல் வீக்கம் தீரும்.