Neerbrahmi plant

நீர்ப்பிரம்மி – நம் மூலிகை அறிவோம்

Bacopa monnieri; Waterhyssop; Neerbrahmi plant

இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பார்க்கக் கூடிய மூலிகை நீர்ப்பிரம்மி. நீர் நிலைகள், நீர் ஓடைகள் என நீர் வளம் இருக்கும் இடங்களில் தானே வளரும் ஒரு மூலிகை நீர்ப்பிரம்மி. மருத்துவகுணம் கொண்ட இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் சதைப்பற்று, சாறு உள்ள சிறு இலைகளாக இருக்கக்கூடியது. இது ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. சில இடங்களில் நீல நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் இதன் பூக்களைப் பார்க்க முடியும்.

Neerbrahmi plant

பல மருத்துவகுணங்களைக் கொண்ட சிறந்த செடி இது. பல நோய்களுக்கும் மருந்தாக பல்லாயிரம் ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை இது. மலச்சிக்கல், வயிற்று நோய், குடல் புண் போன்ற குடல் நோய்களுக்கும், கல்லீரல் நோய்கள், பித்த நோய், சரும நோய், வீக்கம் போன்றவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும். காமம், சிறுநீர்ப் பெருக்கியாகவும் இந்த நீர்ப்பிரம்மி உள்ளது.

வீக்கங்கள் குறைய

உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க சிறந்த பலனை நீர்ப்பிரம்மி அளிக்கிறது. இதன் இலைகளை அரைத்து வீக்கங்கள் இருக்கும் இடங்களில் பற்றிட வீக்கங்கள் குறையும்.

சூலை, மேகவெட்டை நீங்க

நீர்ப்பிரம்மியை பசும்பாலுடன் கலந்து பருக சூலை, மேகவெட்டை போன்ற நோய்கள் மறையும்.

பித்த நோய்களுக்கு

நெய்யுடன் நீர்பிரம்மி இலையை தைலமாக காய்ச்சி தேய்த்து வர காக்கா வலிப்பு, பித்த நோய்கள் நீங்கும்.

சளி நீங்க

மார்பு சளி, அதிக சளியால் ஏற்படும் இருமலுக்கு நீர்பிரம்மி இலைகளை வேகவைத்து அரைத்து மார்பில் கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

(1 vote)