neem leaves

நீம் அஸ்திரா / Neemastra

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.

இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது நீம் அஸ்திரா. இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

நீம் அஸ்திரா தயாரிக்க தேவையானவை

நாட்டு மாட்டுச்சாணம் – 2 கிலோ
நாட்டு மாட்டுச்சிறுநீர் (கோ மூத்திரம்) – 5 லிட்டர்
வேப்பங்குச்சிகள் மற்றும்
வேப்ப இலை – 5 கிலோ

நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பெரிய மண்பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனுடன் 5 லிட்டர் நாட்டு மாட்டு சிறுநீர் (கோ மூத்திரம்) சேர்த்து அதனுடன் 2 கிலோ பசுஞ்சாணம், நன்கு மைய அரைத்த வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை சாந்து சேர்த்து 24 மணி நேரம் 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

மூடி போட்டு மூடி வைக்க கூடாது. நாளொன்றிற்கு இக்கரைசலை ஒரு குச்சி கொண்டு இரண்டு முறை நன்கு கலக்கி விடவேண்டும்.

நீம் அஸ்திரா பயன்படுத்தும் முறை

பின்பு ஒரு துணியில் வடிகட்டி பயன்படுதல்லாம். சாறு உரிஞ்சும் பூச்சி மற்றும் அனைத்து தீமை செய்யும் பூச்சிகளுக்கும் இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.