வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்

இயற்கை விவசாயம், வீட்டுத் தோட்டம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பூச்சி விரட்டியாக அதிலும் குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கும் கரைசல் இந்த வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்.

சாறு உறிஞ்சும் பூச்சிககளை கட்டுப்படுத்தி அழிக்க சிறந்த கரைசல் இது. மிக எளிமையாக இதனை தயாரிக்கலாம். வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவரும் எளிமையாக இதனை தயாரித்து பயன்படுத்தலாம்.

வேப்பங்கொட்டை பூண்டு கரைசல் தயாரிக்க தேவையானவை

வேப்பங்கொட்டை – 5 கிலோ
வெள்ளைப் பூண்டு – 500 கிராம்
நாட்டுப்பசு மாட்டுக் கோமூத்திரம் – 10 லிட்டர்

வேப்பங்கொட்டை பூண்டு கரைசல் தயாரிக்கும் முறை

வேப்பங்கொட்டை மற்றும் வெள்ளைப்பூண்டை நன்கு இடித்து, பருத்தி துணியில் வைத்து நன்கு இறுக்கமாக பொட்டலம் போல் கட்டி 10 லிட்டர் நாட்டுப்பசு மாட்டுக் கோமூத்திரத்தில் மூன்று – நான்கு நாட்கள் ஊறவைத்தால் வேப்பங்கொட்டை பூண்டு கரைசல் தயார்.

பயன்படுத்தும் முறை

500 மில்லி கரைசலுடன் 1௦ லிட்டர் நீர் சேர்த்து மாலையில் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும்.

கட்டுப்படும் பூச்சிகள்

செம்பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும்.