வேப்பிலை கரைசல் தயாரிக்க முதலில் ஒரு லிட்டர் நீர், ஐம்பது மில்லி நாட்டு பசுவின் மூத்திரம் (கோமூத்திரம்), ஐம்பது கிராம் நாட்டுப் பசுஞ்சாணம், ஐம்பது கிராம் வேப்பிலை விழுது போன்றவை தேவை.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு கலக்கிவிட்டு ஒருநாள் வைக்கவேண்டும். இடையில் இரண்டு முறை ஒரு குச்சியைக்கொண்டு நன்கு கலக்கிவிடவேண்டும்.
இவை நன்கு நொதித்தபின் ஒரு துணியைக்கொண்டு வடிகட்டிவிட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி பூச்சிகள் இருக்கும் இலைகள் மீது நன்கு படுமாறு தெளிக்கவேண்டும்.