இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை
தாவரப் பூச்சிக்கொல்லிகள்
இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது. இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது சீத்தாப்பழம், மிளகாய் மற்றும் வேம்புக்கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.
சீத்தாப்பழம், மிளகாய் மற்றும் வேம்புக்கரைசல்
100 கிராம் சீத்தாப்பழ இலைகளைப் பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்துச் சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாறை வடிகட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 25 கிராம் காய்ந்த மிளகாயை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதை மறுநாள் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். 50 கிராம் வேப்பம் பழங்களை நசுக்கித் தண்ணீரில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் சாறு எடுக்க வேண்டும். இந்த மூன்று கரைசலையும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி வடிகட்டித் தெளிக்க வேண்டும்.
கட்டுப்படுத்தும் பூச்சிகள்
அசுவினி, புள்ளிவண்டு, செதில் பூச்சி, இலைச் சுருட்டுப் புழு
இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும். இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு