நீலஞ் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

நீலம் சம்பா பாரம்பரிய அரிசி பிரசவித்த பெண்களுக்கு அவசியமான சத்துக்களை கொண்டிருக்கக்கூடிய ஒரு அற்புதமான ரகம். பல அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கக்கூடிய அரிசி.

சம்பா பட்டத்தில் விளையக்கூடிய இந்த சிகப்பு நிற மோட்டா நீலஞ்சம்பா அரிசி ஆறுமாதம் விளையும் பயிராகவும் உள்ளது. ஏழு அடி வரை உயரம் வளர்க்கூடியது. நீல நிறத்தை கொண்ட இந்த நெல்மணிகளை ஏரி, குளங்களில் கூடப் பயிர் செய்யலாம்.

ஆறுமாதம் விளையும் இந்த சிகப்பு நிற அரிசியின் நடுப்பகுதியை பல விதங்களில் பயன்படுத்தலாம். அதாவது இதன் வைக்கோல் ஆடு மாடுகளுக்கு நல்ல ஒரு தீவனமாகவும், வீடுகளுக்கு சிறந்த கூரையாகவும் பயன்படும்.

தாய்ப்பாலை அதிகரிக்கும் அரிசி

தாய்ப்பால் சுரக்க உதவும் சிறந்த அரிசி இந்த நீலஞ்சம்பா அரிசி. குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் நீலம் சம்பா அரிசியில் உணவு தயாரித்துக் கொடுக்க தாய்ப்பால்ப் பெருகும். குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான சத்துக்களும் நிறைந்த அரிசியாகவும் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான ரகம் இது. பல சத்துக்கள் நிறைந்த இந்த அரிசியில் தாய்ப்பாலை பெருக்கும் ஆற்றலும், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளது என பல ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.

சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த நீலஞ் சம்பா அரிசி

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான சுண்ணாம்பு சத்துக்களை கொண்டிருக்கக்கூடிய அரிசி இது என்பதால் அவ்வபொழுது இதனை உட்கொள்ளவது நல்ல பலனை அளிக்கும்.

செரிமான மண்டலத்தை பலப்படுத்தும்

அஜீரணம், மலச்சிக்கல், செரியாமை போன்ற தொந்தரவுகளை போக்கும் அரிசி இந்த நீலம்சம்பா அரிசி. சீராக செரிமானத்தை அளிக்கும் அரிசி. Low glycemic index கொண்ட அரிசி.

இளம்பெண்களுக்கு அவசியமான நீலம்சம்பா அரிசி

வயதிற்கு வந்த பெண்களுக்கும், இளம்பெண்களுக்கும் இன்று இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை முடி உதிர்வு, சரும பளபளப்பின்மை போன்றவை. இந்த பிரச்சனைகளைப் போக்கும் சத்துக்கள் இந்த அரிசியின் அதிகமாக உள்ளது. மேலும் இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் கழிவுகளை நீக்கி, இரத்தத்தை பெருக்கும் தன்மையும் நிறைந்த அரிசி.

நீலஞ்சம்பா அரிசி பயன்கள்

நீரழிவு, உடல் பருமன், சத்துக் குறைபாடு, இரத்த சோகை என பல தொந்தரவுகளுக்கு அற்புதமான அரிசி. மேலும் எலும்புகளுக்கு பலத்தை அளிக்கக் கூடியது.

(2 votes)

2 thoughts on “நீலஞ் சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

  1. Anbarasan

    5 stars
    Sir/Madam,
    Kindly let me know how and where to buy Neela samba rice.
    Thanks.

    1. admin Post author

      u can try rajiv tiruthurapoondi – 9952787998

Comments are closed.