இந்தியாவின் பிரபலமாக அரிசி வகைகளில் சிறந்த ஒரு அரிசி நவரா அரிசி. இது கேரளாவை பூர்வீகமாக கொண்ட கேரளத்து அரிசி. கேரளாவில் பாலக்காடு பகுதியில் விளையக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த நெல் ரகம் இந்த நவரா நெல்லரிசி. பாலக்காட்டின் மண் வகைக்கும் அதனுடைய சுற்றுச்சூழல் நீருக்கும் ஏற்றார்போல் விளையக்கூடிய ஒரு ரகம். பாலக்காட்டில் விளையக்கூடிய இந்த ரகத்திற்கு உலக அளவில் அமோகமான வரவேற்பு உள்ளது, காரணம் இதில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும்.
புவிசார் குறியீடு
இந்த அரசியல் மற்றொரு சிறப்பு, புவிசார் குறியீடு பெற்ற ஒரு சிறந்த அரிசி. நவரா அரிசியின் தவிடு, உமிக்கும் அதிக மருத்துவகுணங்கள் உள்ளது. உலக அளவில் நம் இந்தியாவின் பெருமையை சொல்லும் பாஸ்மதி அரிசி, சீரக சம்பா அரிசி என்ற வரிசையில் இந்த நவரா அரசுக்கும் ஒரு தனி இடம் உள்ளது. இது சிகப்பு அரிசி வகையை சேர்ந்தது.
ஆயுர்வேத அரிசி
ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பல ஆயுர்வேத நூல்களின் குறிப்புகளில் இந்த அரிசியில் இரண்டு விதமாக நெல் ரகங்கள் இருந்துள்ளது. ஒன்று வெள்ளை நிற உமியைக் கொண்ட அரிசி. மற்றொன்று கருப்பு நிற உமியைக் கொண்ட நெல் ரகம். இதில் வெள்ளை நிற உமியை கொண்ட அரிசி ரகத்துக்கு அதிக மருத்துவ குணங்கள் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளது. இன்று பெருமளவில் பயன்படுத்தக்கூடியது கருப்பு நிற அரிசியாக உள்ளது.
நவரா அரிசி பாச்சோறு
நவரா அரிசி புழுங்கல் அரிசியாகவும் பச்சை அரிசியாகவும் கிடைக்கிறது. புழுங்கலரிசி சிறந்த ஒரு மருத்துவ குணங்களைக் கொண்டிருகிறது. பிறந்த குழந்தைகளின் முதல் உணவாக கொடுக்க கூடிய பாச்சோறுக்கு காலம் காலமாக கேரளாவில் இந்த அரிசியையே பயன்படுத்தி வந்துள்ளனர். புழுங்கல் அரிசியில் செய்யக் கூடிய உணவுகளில் பிரதானமான இடத்தையும் இந்த நவரா அரிசி பிடித்துள்ளது.
குழந்தைகளுக்கு
எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த நவரா அரிசி சிறந்ததாக உடலை தேற்றும் மருந்தாகவும் உணவாகவும் உள்ளது.
குழந்தைபெற
திருமணமான பெண்களுக்கும் கருவுற்றிருக்கக்கூடிய தாய்மார்களுக்கும் ஒரு அற்புதமான அரிசி ரகம் இந்த நவரா அரிசி. திருமணமான பெண்களுக்கு தேவையான சத்துகளையும் பலத்தையும் அளிப்பதுடன், ஆண்களுக்கும் சிறந்ததாக விளங்குகிறது. மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போக்கும் அற்புதமான ரகம்.
பெண்களுக்கு
கருவுற்று இருக்கக்கூடிய பெண்களுக்கு தேவையான சத்துக்களையும், சீரான குழந்தை வளர்ச்சிக்கும், குழந்தைக்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கும் அரிசி இந்த நவரா அரிசி. இந்த நவரா அரிசியின் கஞ்சி உடலுக்கு உகந்த உணவாக உள்ளது. எளிமையாக செரிமானமாகக் கூடிய அரிசி. இந்த அரிசியை வேக வைத்து பால் சேர்த்து உண்பதால் நல்ல ஒரு பலனையும் நல்ல ஒரு ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் நாம் பெற முடியும்.
வாயிற்று பூச்சி, புழு அழிய
நவர அரிசியை மூலிகைகள் பால் கொண்டு தயாரித்து உண்பதால் வயிற்றில் இருக்கும் புழு, பூச்சிகள் அகலும்.
தவிடு எண்ணெய்
அரிசிக்கு மட்டுமல்லாமல் இந்த நெல்லுக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த அரிசி உமியில் இருந்து தயாரிக்கப்படும் பலவிதமான பொருட்கள் அதேபோல இந்த அரிசியின் தவிடு பகுதியிலிருந்து தயாரிக்கக்கூடிய எண்ணெய்க்குமே மிக அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. நவரா அரிசி தவிட்டு எண்ணெய் உடல் வலியைப் போக்கக் கூடியதாகவும், இடுப்பு வலி, வாதம், பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு மருந்தாக உள்ளது. வைட்டமின் சி, சத்துக்களும் பல விதமான சத்துக்களும் கொண்ட அரிசி. வீக்கங்கள் வலிகளை போக்கும்.
சரும நோய்களுக்கு
கேரளாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த நவரா அரசி எண்ணெய்யும், அரிசியும் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. நவரா அரிசியில் எண்ணெய் தயாரித்து மருந்தாகவும், தோல் சருமத்தில் வரக்கூடிய நோய்களுக்கும் பயன்படுத்துவது உண்டு.
நீரழிவு, உடல்பருமன், ரத்த சோகை போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி இந்த நவரா அரிசி. சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. தொடர்ந்து இந்த அரிசியை உண்பதால் மூட்டுகளில் வரக்கூடிய பாதிப்புகள், எலும்புகளில் வரக்கூடிய பிரச்சனைகள், ரத்த ஓட்டத்தில் வரும் குறைபாடுகள், இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கும் நீங்கும்.
இன்று ஓட்ஸ் போன்ற பலவிதமான வெளிநாட்டு உணவுகளை பிரதானமான காலை உணவாக நம் இந்தியாவில் உள்ளது. இந்த ஓட்ஸை விட பல மடங்கு அதிக சத்துக்களையும் ஊட்டத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான அரிசி நமது தமிழகத்தின் கருங்குருவை அரிசியும் கேரளத்து நவரா அரசியும்.
உடலுக்கு நல்ல ஒரு கதகதப்பை கொடுக்கக்கூடிய அரசி இந்த நவரா அரிசி. குளிர் காலங்களில் இந்த அரிசியை உண்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகளிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
இதனை கஞ்சியாக சாப்பிடுவது நல்ல ஒரு சுவையாகவும் இருக்கும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல ஒரு பொருத்தமான உணவாகும் இருக்கும். உடலை தேற்ற நினைக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறந்த ஒரு அரிசியாகவும் இந்த நவரா அரிசி உள்ளது.