நாவல் பழம்

தமிழகமெங்கும் அதிகமாக காணப்படும் கூடிய ஒரு மரவகை இந்த நாவல் மரங்கள் உள்ளது. பொதுவாக ஆற்றங்கரைகள், சாலை ஓரங்களிலும், கடற்கரை ஓரங்கள் என பல இடங்களில் தானாக வளரக்கூடிய ஒரு பெருமரம் இந்த நாவல் மரங்கள். கருஞ்சிவப்பு கனியைக் கொண்டது இந்த நாவல் மரம். இலை, பட்டை, பழம், விதை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. மரங்களின் பட்டை சதையை சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் சிறுநீரைப் பெருக்க கூடியதாகவும், பசியைத் தூண்டக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு நேரேடு, ஆருகதம், சுரபிபத்தினர் என்ற வேறு பெயர்கள் உண்டு.

ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கக் கூடிய நாவல் பழங்கள் உடலுக்கு சிறந்த பலத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். நாவல் பழங்கள் பல வகைகள் இருந்தாலும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியது இரண்டு வகைகள். ஒன்று நாட்டு நாவல் பழம் இன்னொன்று சம்பு நாவல் பழம். இது சிறிய வடிவில் கருநீல நிறத்தில் இருக்கும். நாவல் பழத்தின் சதைப் பற்று சற்று கூடுதலாக இருக்கும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளை ஒருங்கே பெற்று இருக்கும். இது சற்று சீதளத்தை உடையது. எனவே சீதள உடம்பு உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் ஜலதோஷம், பித்தசுரம், கபவாதம் ஆகியவை உண்டாகும்.

சீதபேதி குணமாக

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துக்களும் உள்ளது. சில மருத்துவத்திற்காகவும் இதை உண்டு பயனடையலாம். நாவற்பழத்தை கொட்டை நீக்கி சாறு எடுத்து அதனுடன் அதே அளவு சர்க்கரை சேர்த்து காய்ச்ச பாகு போல கெட்டியாகிவிடும். இதை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் அரை தம்ளர் வெந்நீர் ஒரு ஸ்பூன் வீதம் சேர்த்து பருகி வந்தால் ஒரு வாரத்தில் ரத்த பேதி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நின்றுவிடும். நாட்பட்ட சீதபேதியை குணப்படுத்த கூடிய வல்லமை உடையது.

உடல் சூடு தணிய

சிலருக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும். உடல் சூடாகவே காணப்படும். அவர்களுக்கு கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இருக்கும். அவர்கள் தினமும் நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு அதன் பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் பருகி சுமார் அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவினை அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன் கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் விரைவில் குணமாக்கும் தன்மை கொண்டது.

எலும்புகளை பலப்படுத்தும்

சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் கொண்டது என்பதால் எலும்புகளுக்கு பலமளிக்கும். மூட்டுவலி, எலும்புகளில் ஏற்படும் நோய்களுக்கும் அற்புத மருந்து. பெண்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கவல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், வெள்ளைப்படுதலுக்கு நல்லது.

நீரிழிவு

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் வல்லமை பெற்றது. காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் சக்தியை அதிகரித்து, நரம்பு மண்டலத்தை சரி செய்வதோடு கணையத்தில் சுரக்கும் தன்மையையும் சீர்செய்கிறது. எனவே நோயின் ஆரம்பத்திலேயே இதை சாப்பிட்டு நோயை குணப்படுத்தி கொள்ளலாம்.

நாவல் பழக் கொட்டைகள்

நாவல் பழக் கொட்டைகள் துவர்ப்பு சுவை கொண்டதாகவும் இதனை நீரிழிவு உள்ளவர்கள் தூளாக்கி தேநீராக பருகிவர நீரிழிவில் இருந்து விரைவில் வெளிவர உதவக் கூடியதாகவும் இருக்கும்.

நாவல் பட்டை

இந்த நாவல் பட்டையைக் நன்கு காய்ச்சி குடிநீராக காய்ச்சி காலை மாலை என பருகிவர நீரிழிவு கட்டுப்படும்.

நாவல் கொழுந்து

அஜீரணம், வயிற்றுப் போக்கு, பேதி போன்றவற்றிற்கு சிறிதளவு நாவல் மர இலை கொழுந்தை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு ஏலரிசி, லவங்கப் பட்டைத் தூள் சேர்த்து காலை மாலை பருக உடல் சூடினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.