பிரண்டை கரைசல்

பிரண்டை கரைசல் – இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

தாவரப் பூச்சிக்கொல்லிகள்

இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது. இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது பிரண்டை கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.

காய்கறியில் ஏற்படும் அஸ்வினி பூச்சி தாக்குதலுக்கு சிறந்த பூச்சி விரட்டி இந்த பிரண்டை கரைசல். செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்ட எந்த பெரிய செலவும் இல்லாமல் இயற்கை முறையில் இந்த பூச்சி விரட்டியை தயாரித்து பயன்படுத்த உணவு நஞ்சாவதனை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 3 கிலோ பிரண்டை
  • 3 கிலோ சோற்றுக் கற்றாழை
  • ½ கிலோ புகையிலை
  • 10 லிட்டர் நாட்டு மாட்டு கோ மூத்திரம்

செய்முறை

  • மேற்கண்ட அளவுகளில் இந்த மூன்றையும் உரலில் நன்கு இடித்து, 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்துடன் கலந்து, மூன்று நாட்களுக்கு ஊற வைக்கவும்.
  • மூன்று நாட்களும் காலை மாலை இருவேளையும் வலது புறமாக கலக்கி விடவும்.

பயன்படுத்தும் முறை

மூன்று நாட்கள் கழித்து 10 லிட்டர் பிளாஸ்டிக் டேங்கில் வடிகட்டி 300 மில்லி லிட்டர் கரைசலுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தெளிக்கவும்.

பூச்சித் தாக்குதல் பொறுத்து,ஒரு தெளிப்பிற்கும் மறு தெளிப்பிற்கும் இடையே மூன்று நாள் இடைவெளி விட்டு மூன்று முறை வரை தெளித்தால் அஸ்வினி பாதிப்பிலிருந்து பயிர் களை மீட்கலாம். பிரண்டை கரைசலை ஆறு மாத காலம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.