வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ்தைபடுகிறோம்.
இந்த அவஸ்தையை நீக்க கடைகளில் கொசுக்களை விரட்ட விற்கப்படும் கொசுவர்த்தி, மேட், கிரீம், திரவம் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.
அவ்வாறு அவற்றை பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று நம்மில் பலருக்கு தெரியும். அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்பதும் உண்மை. கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது.
இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, நமது நுரையீரல்களையும் அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூக்கும் போது அதிகம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு நுரையீரலின் அரையை பாதிக்கிறது.

சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே வீட்டு ஜன்னல்கள், கதவுகள் என்று அனைத்தையும் அடைத்து விட்டு இந்த கொசு விரட்டிகளை போட்டுவிடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அடைத்து விடுவதால் வீட்டில் சமைக்கும் போது வரும் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற்றை விட, அசுத்தமான காற்று இருப்பதால் அவற்றை சுவாசிக்கும் போது அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும்.
இவை மூன்று நாட்கள் நீடித்தால் அதனை அலர்ஜி என்று முடிவு செய்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயாளியாக நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். பின்னர் அந்த நிலை சற்று படிப்படியாக முன்னேறியதன் அறிகுறியாக உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது.
சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வலிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த புகையை சுவாசிப்பதால் சில சமயங்களில் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தவல்லது என்றும், கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்கவும் வல்லது.
இவ்வளவு தீங்கை விளைவிக்கும் ரசாயன கொசுவத்தியை பயன்படுத்துவதை தவிர்த்து நாட்டு பசுஞ்சாணத்தில் (வரட்டி) தயாரிக்கும் மூலிகைகள் கொண்ட வில்லத்தை பயன்படுத்தலாம்.
நாட்டு பசுவில் சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. இதனால் உடலுக்கும் நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்திற்கும் நல்ல சக்தி நிலை ஏற்படும். எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பசு விரட்டிக்கு பிராண சக்தியை கொடுக்கும் அக்சிஜென் அதிக அளவில் உள்ளத்தால் புற்றுநோய்யை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
நாட்டு பசுவின் சாணத்துடன் வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடை, சிறியாநங்கை, சோற்று கற்றாழை போன்றவற்றை கலந்து விரட்டி செய்தும் பயன்படுத்தலாம்.
கொசுவலையை பயன்படுத்துவது எல்லாவற்றையும் விட சிறந்தது. நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் கொசுவலையை பயன்படுத்தலாம்.