- கருந்துளசி இலைச்சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட கபம் குணமாகும்.
- சுண்டக்காயை சமைத்து உண்ண கபம் நீங்கும்.
- சிறுகுறிஞ்சா வேர் பொடி வெந்நீரில் கலந்து சாப்பிட கபம் வெளியேறும்.
- ஜலதோஷம் நீங்க துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
- நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்க ஆஸ்துமா தீரும்.
- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்க சளி அகலும்.
- முசுமுசுக்கை இலையை தோசை மாவுடன் சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட சளி சுரம் தீரும்.
- ஆடாதோடை இலைச் சாற்றை தேன் கலந்து சாப்பிட இருமல் நீங்கும்.
- கரிசலாங்கண்ணி, அரிசி திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட காசம் இரைப்பு நீங்கும்.
- வெந்தயக் கீரையை சமைத்து உண்பதால் இருமல் குணமாகும்.
- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் மூன்று வேளை உட்கொள்ள வறட்டு இருமல் நீங்கும்.
- வல்லாரை பொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்துவர சளித் தேக்கம் நீங்கும்.
- தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிடக் காச நோய் நீங்கும்.
- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி தீரும்.
- பசுந்தயிரை உணவில் சேர்க்க காசநோய் குணமாகும்.
- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடிக்க இருமல் தீரும்.
- அன்றாடம் இஞ்சி முரப்பா சாப்பிட மார்பு சளி வெளியேறும்.
- இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு சேர்த்து தேன் கலந்து குடிக்க இரைப்பு தீரும்.
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட மார்பு வலி நீங்கும்.
- துளசி சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
- முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, ஜலதோஷம், இருமல் நீங்கும்.
- மாதுளம் பழம் சாப்பிட ஜலதோஷம் தீரும்.
- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும்.
- நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர சளியில் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.