Herbal juice, mooligai juice, fruit juice, vegetable juice, healthy juice, herb juice recipe in tamil

இயற்கை சாறுகள்

கதிர்வீச்சுகள், இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள், மலட்டு விதைகள், இரசாயன பதப்பொருள், சுவையூட்டி, நிறமூட்டி என்று நவீனம் வளர்ந்துகொண்டு இருந்தாலும் பக்கவிளைவுகள் பலமடங்காகவே உள்ளது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

ஒரு குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தை என அனைவரும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணவையே அன்றாடம்  அருந்துகின்றனர். காலை இட்டலி உணவு என்றால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தை என அனைவரும் அதனையே பொதுவாக உட்கொள்கின்றனர்.  காலை உணவு மட்டுமில்லாமல் மதியம், இரவு உணவுகளும் அவ்வாறே உட்கொள்ளப்படுகிறது. 

இவை பொதுவாக எல்லா வீடுகளிலும் நடக்கும் அன்றாட செயல் என்றாலும் பாதிப்பு என்ற திசையில் திரும்பிப் பார்த்தல் தொண்ணூறு சதவீதம் குழந்தைகளே அவற்றில் சிக்கித் தவிக்கின்றனர். 

நோய் காரணம் என்ன?

கருவிலேயே இன்று பிறக்கும் குழந்தைகளும், பிறந்த பச்சிளம் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாய்மார்களோ மேலும் தங்கள் குழந்தை தொலைக்காட்சிகளில் வரும் கொளுகொளு குழந்தைகளைப் போல கொளுகொளு வென்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட தொந்தரவுகள் அதிகரிக்கிறது.

தேவையற்ற அதிகப்படியான புரியாத உணவுகளால் பெருகும் சாதாரண நோய்கள் முதல் மரபணு நோய்கள் வரை பலவற்றிற்கு காரணங்களே இன்று தெரிவதில்லை. என்னதான் குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரியான உணவை உட்கொண்டாலும் முதலில் சிறு குழந்தைகளும், பின் 30-40 வயதானவர்களுமே பெரிதும் இதில் பாதிக்கப்படுகின்றனர். 50-90 வயதுடையவர்கள் இவ்வாறான புதுப்புது நோய்களால் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை.

மன உளைச்சல், தவறான பழக்கம், ஓய்வின்றி அதிகப்படியாக இயங்கும் உறுப்புகள் பலவீனம் போன்றவற்றலேயே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சீரான பராமரிப்பு இன்றி அதிக அழுத்தத்தை பெரும் உறுப்புகள், சுரப்பிகள், நாளங்கள் தொடந்து இயங்குவதனால் ஏற்படும் பதிப்புகளே இவை அல்லது உடல் கழிவுகள் சீராக வெளியேராமல் உருவாகும் நோய்களே (உதாரணதிற்கு புற்று நோய்கள்)  தவிர காரணம் தெரியாத மரபணு நோய்கள் இல்லை. 

அடிப்படையே மாறிவிட்டது

50 வயதை ஆரோக்கியமாகக் கடந்த தாத்தா பாட்டியின் வழியில் வந்த பெற்றோர் ஓரளவு ஆரோக்கியமாக இருக்க புதுப்புது நோய்கள் புதுக் குழந்தைகளை இன்று தாக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் ஒன்று இரண்டு இல்லை, அடிப்படையே மாறியுள்ளது தான். இன்றைய நவீன உணவுகள் நஞ்சாகப் போனாலும் அன்றைய மனிதர்களின் அன்றைய உணவுகள் அமிர்தமாகவே இருந்தது.

அவர்களின் வாழ்வியலோடு சேர்ந்த செடி, கொடி, மரம் போன்ற தாவிரங்களே இவற்றிற்கு காரணம். இந்த தாவிரங்களின் சாறுகளை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் தொடர்ந்து குழந்தைப்பருவம் முதல் கொடுக்க பலமான உடலை பெற்றனர் அன்றைய மனிதர்கள். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் பரம்பரையைச் சேர்ந்த நம்மவர்கள் இன்று குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? கூடாதா? என்று பட்டிமன்றமே நடத்துகின்றனர். இதில் இந்த இயற்கை சாறுகள் வேறா என்கிறிர்களா? இதற்கு நம் கண்முன்னே இருக்கும் நம்மைவிடவும் நம் குழந்தைகளை விடவும் ஆரோக்கியமாக இருக்கும் நம் முன்னோர் தான் சான்று.       

Herbal juice, mooligai juice, fruit juice, vegetable juice, healthy juice, herb juice recipe in tamil

துளசி, வெற்றிலை போன்றவற்றை இயற்கை சாறெடுத்து சங்கின் மூலமாக அன்று குழந்தைகளுக்கு கொடுத்துவந்தனர். இதனால் பிறந்த, வளரும் குழந்தைகளின் அடித்தளம் வளமானதாக அமைந்தது, வாழ்வும் வளமானது.

காலத்திற்கு ஏற்ப சாறுகள்

இவ்வாறு ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றார்ப்போல் ஒவ்வொரு சாறுகளை பருகியதன் விளைவாக உடலில் சேரும் விஷப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் கழிவுகள் வெளியேறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைப்பருவத்திலேயே கூடுகிறது, உடல் பலப்படுகிறது. இதுவே நம் முன்னோர்களில் அதாவது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவின் உயிர் காக்கும் மருந்துகளாகவும் இருந்து வந்தது. எந்த செயற்கை வடிவமும் இல்லாது இவற்றை தயாரித்து பருகிவந்தனர். 

விளையாடும் குழந்தைப்பருவத்தில் சிறந்த கிருமிநாசினியாக துளசியும், கண்விழித்து படிக்கும் வயதில் கால்லீரலைப் பாதுகாக்க கீழாநெல்லியும், உடல் சூட்டை தணிக்க இளநீர் அல்லது பூசணி சாறு என்று அடுக்கிக்கொண்டே போகலாம் நம் முன்னோர் பயன்படுத்திய இயற்கை சாறுகளை.

எவ்வாறு இதனை தயாரிப்பது

கண்விழித்து படிக்கும் குழந்தைகளுக்கு கீழாநெல்லி சாறு நல்லது என்று பார்த்தோம். அப்படியானால் கீழாநெல்லி சாறு எவ்வாறு தயாரிப்பது? உடல் ஆரோக்கியத்திற்காக, உடலின் அடித்தளத்தில் சென்று பணியாற்றும் சாறுகளை இன்றைய நவீன Mixie அல்லது Blender மூலம் தயாரிப்பது பயனளிக்காது.

Mixie அல்லது Blender கொண்டு அரைத்தோமானால் அவற்றின் சுழற்சியில் ஏற்படும் வேகம் மற்றும் சூட்டின் காரணமாக கீழாநெல்லி உள்ள மூலக்கூறுகள் சிதைவதுடன் உயிர் சக்தி மற்றும் மருத்துவ குணத்தை இழந்து விடுகிறோம். அதன் பின் கீழாநெல்லி சாறு என்ற பெயரில் வெறும் சக்கையை பருகுகிறோம். இவ்வாறு அதன் மருத்துவகுணத்தை அழித்துவிட்டு அருந்தினோம் என்ற பெயரைத்தவிர எந்த உபயோகமும் உடலுக்கு இல்லை.  

அதைப்போலவே மற்றொரு உதாரணதிற்கு வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்வோம். சதாரணமாக கடையில் வெள்ளரிக்காயை வாங்கும்போது அவை புதிதாகவும், வளமாகவும், பச்சையாகவும் இருக்குமாறு கவனித்து வாங்குகிறோம். காரணம் வாடியிருந்தால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் அழிந்திருக்கும் என்பதனால்.

பார்த்து பார்த்து வாங்கும் காய்கள்

இவ்வாறு சத்துக்களைப் பார்த்து பார்த்து வாங்கிய வெள்ளரிக்காயை பச்சையாக உண்டால் மிக ருசியாகவும் அறுசுவைகளுடனும் இருப்பதனைக் காணலாம். உயிர் சத்துக்களும் தாது உப்புக்களும் (Minerals) கொண்டதாக இருக்கும். அதனையே அடுப்பில் வைத்து சமைத்து வெறுமனே சாப்பிடமுடியாது. காரணம் அதில் உள்ள தாது உப்புக்கள் அழிந்திருப்பது,

அதனால் அதனை சமாளிக்க செயற்கை உப்பினையும் சில மசாலாக்களையும் சேர்கிறோம். இந்த செயற்கை உப்பு சுவையினால் நாக்கு மயங்கிவிட்டலும் உடல் தன் ஆற்றலுக்கு தேவையான உயிர் சத்துள்ள உணவினைத் தேடிக்கொண்டே இருக்கும். 

இந்த இயற்கை சாறுகள் உடலுக்கு நல்லது என்று இன்று பலர் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் பதப்பொருட்கள் கலந்த சாறுகளை, உதாரணதிற்கு நெல்லி சாறு, கற்றாளை சாறு பருகுகின்றனர். இவற்றாலும் எந்த பயனும் இல்லை. 

உயிர் சத்துக்கள்

சாறுகளின் மூலக்கூறுகளையும் உயிர் சத்தையும் சிதைத்துவிட எவ்வாறு உடலின் மூலக்கூறில் அவை பணியாற்றும். உடலின் அத்தியவசியப் பணிகளான பராமரிப்பு, பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு சிதைக்காத உயிர் சக்தி மற்றும் நுண்ணூட்ட சத்திகளும் கொண்ட இயற்கை சாறுகளே அவசியம். அனைத்தையும் ஈடுக்கட்டும் விதமாகவே நம் இயற்கை சாறுகள் அமைகிறது.

இவையே நம் முன்னோர்களின் ஆணிவேரை பலமாக்கியது. அவற்றையே அவ்வாறே நம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் தயாரிப்போம். உடலுக்கு மருந்தாகவும், உணவாகவும் விளங்கும் இந்த சாறை எவ்வளவு, எவ்வாறு, எந்த நேரம் அருந்துவது என்றும் அறிந்து வைத்திருந்தனர்.

Alkaline – காரத்தன்மை

இயற்கை சாறுகள் உடலுக்கு தேவையான Alkaline (காரத்தன்மையை) அளிக்கிறது. இயற்கை சாறுகளில் இளநீர், கரும்புச்சாறு, வேகவைக்காத காய்கறி சாறுகள், மூலிகை சாறுகள், கீரைச்சாறுகள், மற்றும் பழச்சாறுகள் அடங்கும். பெரும்பாலும் பழங்களை பச்சையாகவே உண்டலும், பலர் மூலிகைகளையும், காய்கறிகளையும் அறவே தவிர்க்கின்றனர்.

உடலுக்கும் உயிருக்கும் உணவளிக்கும் இவை அன்றாடம் நம் உணவில் பங்குபெற வேண்டிய ஒன்று. ஒவ்வொரு சாறு, ஒவ்வொரு நாள் என்ற விதத்தில் நம் வீட்டருகில் கிடைக்கும் செடி கொடி இயற்கை காய்கனி, மூலிகைகள் கொண்டு தயாரித்து பருகலாம். எந்த இரசாயனமும் பூச்சிகொல்லிகளும் இன்றி எல்லா இடங்கலிலும் வளரும் மூலிகைகள் எப்பேர்ப்பட்ட கதிர்வீச்சுகள் மற்றும் இரசாயன நஞ்சுகளையும் உடலில் இருந்து வெளியேற்றி காக்கும்.

மேலும் இந்த பச்சிலைகளால் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு, வைட்டமின், தாது உப்புக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றன.  மேலும் சாறுகளில் என்னென்ன வகைகள் உள்ளது அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்றும் பார்க்கலாம்.

(9 votes)