விதைகளும் விழாக்களும்

நாட்டு விதைகள் / மரபு விதைகள்

பறவைகள், விலங்குகள், காற்று, நீர் என நம்மைசுற்றியிருக்கும் அனைத்தும் இந்த இயற்கையின் கொடையான செடி, கொடி மரங்களை பரப்பிக் கொண்டே இருக்கிறது. பறவைகளின் எச்சத்தின் மூலமும், விலங்குகளின் தோல்களின் துணையுடனும், பரவும் காற்றும் நீரும் விதைகளை உலகில் அனைத்து மூலைகளுக்கும் பரப்புகிறது.

இதற்கு விதிவிலக்காகவே இன்றைய மனிதன் இருக்கிறன். நமது முன்னோர்கள் நமக்கு கடனாக அளித்த சொத்துக்களை அவர்களின் பேரன் பேத்திகளுக்கு வட்டியுடன் அளிப்பதற்கு பதிலாக அவற்றை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு விதிவிலக்காகவே இன்றைய மனிதன் இருக்கிறன். நமது முன்னோர்கள் நமக்கு கடனாக அளித்த சொத்துக்களை அவர்களின் பேரன் பேத்திகளுக்கு வட்டியுடன் அளிப்பதற்கு பதிலாக அவற்றை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இயற்கை, நிலங்கள், நீர், காற்று, விதைகள், விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். பல பல காரணங்களினால் அடுத்த தலைமுறையினருக்கு இவற்றை மாசுபடாமல், பாதுகாப்புடனும் அளிக்க தவறுகிறோம். இவை அனைத்திலும் பிரதானமாக பாதுகாக்க வேண்டியது விதைகளைத் தான்.

நமது முன்னோர்களும் விதைகளுக்கே தங்களின் முழு பாதுகாப்பையும் அளித்தனர். மூடநம்பிக்கை என்று புறக்கணிக்கும் அனைத்து விழாக்களும் சடங்குகளும் விதைகளையும் நமது ஆரோக்கியத்தையும் பேணிக்காக்கவே அவர்களால் உருவாக்கப்பட்டது. 

திருமணத்தில் அட்சதை தூவுவது…

திருமணத்தில் அடிப்படை உணவு தானியமான நெல்லைக் கொண்டு அட்சதை தூவுவதில் பல கண்ணுக்கு தெரியாத நல்ல சக்திகள் உள்ளது. அன்று மண்தரையில் நடந்த திருமணங்களில் அட்சதையாக தூவிய நெல் முளைத்து பலவாகப் பெருகியதைப் போல் திருமணமானவர்களும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து பல பல நன்மக்களையும் அடுத்த தலைமுறையினரையும் உருவாக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொன்னார்கள்.

கோவில் கும்பாபிஷேகம்…

திருமணங்களில் மட்டுமல்ல கோவில் கும்பாபிஷேகமும் நமது விதைகளைப் பாதுகாக்கவே. இயற்கை பேரழிவுகள் வந்தாலும் சரி, அனைத்தும் அழிந்தாலும் சரி மீண்டும் அந்த மண்ணில் உயிர்கள் வாழவே இந்த சடங்குகள். உயரத்தில் பாதுகாப்பாக மஞ்சள், பஞ்சகாயம் சேர்த்து செப்பினாலான கலசங்களில் இருக்கும் விதைகள் அழியக்கூடாது என்று பார்த்துப் பார்த்து அடிப்படை தானியங்களை பாதுகாத்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விதைகளின் வீரியம் குறைய அவற்றை மாற்ற வேண்டி நடக்கும் கும்பாபிஷேகம் வாழ்வியலுக்கு அடிப்படையானது.

 

சித்திரை திருவிழா…

இவைமட்டுமா ஒவ்வொரு ஆண்டும் சுட்டெரிக்கும் சித்திரையில் ஊருக்கு ஊரு திருவிழாக்கள், பால்குடம், முளைப்பாரி.. பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்காத அறிவியல். இவையனைத்தும் நிலங்களை வளமாக்கி, அடுத்த பட்டத்தில் விதைக்க தானியங்களின் விதைகளை தரம்பிரிக்கிறது. 

இன்னும் களிமண்ணால் பிள்ளையார் சதுர்த்தி, குளிரூட்டும்  மண்பானைக்கு அடியில் முளைக்கும் விதைகள் என்று விதைகளை அவர்கள் பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அந்த விதைகளை பரப்புவதிலும், பெருக்குவதிலும் கூட அதிக அக்கறை காட்டினார்கள். 

உணவும் விதையும் ஒன்றுக்குள் ஒன்று

உணவு பற்றாக்குறை, உணவு பாதுகாப்பு, உணவு உற்பத்தி என இந்த உணவிற்கு இன்று பல சோதனைகள் வந்ததற்கு காரணமே விதைகள் காணாமல் போவதும், விதைகள் அழிவதும் தான். உணவும் விதையும் ஒன்றுக்குள் ஒன்று. முட்டையும் கோழியும் போல. முட்டையிலிருந்து கோழிவந்ததா, கோழியிலிருந்து முட்டைவந்ததா என்பதைப் போலில்லாமல் விதையிலிருந்து ஆயிரமாயிரம் விதைகள் கிடைக்கும், அவற்றில் ஒரு பகுதியினை மீண்டும் விதைகளாக முளைக்க  எடுத்துவைத்துவிட்டு மீதமிருப்பதை உணவுக்காக எடுப்பதே நமது மரபு. இனி விதைகளே பேராயுதம்

இயற்கையையும், மண்ணையும் நேசித்த நமது பண்பாட்டில் மறுவிதைப்பிற்கு விதைகளை எடுத்துவைக்காமல் உண்ணக்கூடாது என்ற உயர்த்த சிந்தனை இருந்தது.

(1 vote)

3 thoughts on “விதைகளும் விழாக்களும்

  1. Ayyappan

    விதை வாங்கலாமா

Comments are closed.