நகங்களைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு சிறு வயதிலிருந்தே ஏற்பட்டு விடும். தவறான பழக்கங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக ஆராய்ச்சிகள் மன உளைச்சலும், மன அழுத்தம், கவலை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்கின்றனர். நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி.
நகங்களை கடிக்க சில காரணங்கள்
- மன உளைச்சலும், மன அழுத்தம், கவலை ஏற்படுவதால் பலர் நிகங்களை கடிகின்றனர்.
- அதுமட்டுமலாமல் விரக்தி, என்ன செய்வதென்று தெரியாத காரணத்தினாலும் நிகங்களை கடிக்கின்றனர்.
- பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவதாலும் தங்களுக்கு அறியாமலே நிகங்களை பலர் கடிப்பதுண்டு.
- ஜிங்க் (Zinc) சத்துக்கள் குறைபாட்டினால் நிகங்களை பலர் கடிப்பதுண்டு. இதுமட்டுமல்லாமல் வேறு சத்துக்களின் குறைபாடும் இதற்கு காரணமாகும்.
- பல உடல் நோய்களின் அறிகுறியாகவும் இருபதுண்டு.
- குடும்பத்தில் வீட்டினுள் ஏற்படும் சண்டை, வாக்குவாதம், வெறுப்பு இவையும் நகம் கடிப்பதற்கு ஒரு காரணம்.
நகங்களைக் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
- நகங்களை தொடர்ந்து கடிப்பதால் பற்களில் பதிப்புகள் ஏற்படலாம். பற்களின் எனாமல் சேதம், வீக்கங்கள், தொற்று நோய்கள், வலி ஏற்படலாம்.
- உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபடும்.
- கடிக்கும் நிகங்களை விழுங்கிவிட்டால் வயிற்றுவலி, வயிறு சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். வயிற்றினால் நிகங்களை ஜீரணிக்க முடியாது. இதனால் பல பின்விளைவுகள் ஏற்படும்.
- நகத்தைக் கடிப்பதால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகள் வாய்க்குள் செல்கிறது. இந்த அழுக்கின் மூலமாக தொற்று கிருமிகள்.. பாக்டீரியா, வைரஸ், காளான் நோய்கள் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன.
- இதனால் பல நோய்கள், உள்ளுறுப்பு பாதிப்புகள் ஏற்படுகிறது.
- சிறுவர்களுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் வளர்வதற்கு இது மிக முக்கிய காரணமாகவும் உள்ளது.
- மேலும் நிகங்களைக் கடிக்கும் குழந்தைகள் மலக்குடல் புழுக்கள் கடிக்கும் போது தங்கள் மலவாயை விரல்களால் சொறிவார்கள். இதனால் மலவாயில் இருக்கும் குடல்புழு முட்டைகள் நகங்களில் ஒட்டிக்கொள்ளும். மீண்டும் தங்கள் விரல்களைக் கொண்டு மூக்கு, வாயைத் தொடும்பொழுது மீண்டும் தொந்தரவுகள் அதிகரிப்பதும் புழுக்களை உற்பத்தி பெருகுவதும் இதனால் பல பாதிப்புகள் அதிகரிப்பதுமுண்டு.
- இந்த குழந்தைகள் கைகளை நன்கு சுத்தம் செய்யாது சாப்பிடும்போதும், வாயில் கைவிரல்களை வைக்கும் போதும் குடல் புழு முட்டைகளும் வாய் வழியே உடலுக்குள் வயிற்றை அடைந்து புழுக்களை உற்பத்தி செய்யும். இதனால் சத்துகுறைபாடு, வயிற்று நோய்கள், வயிற்றுவலி என தொந்தரவுகள் பெருகும்.
அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பதிப்புகள் ஏற்படுகிறது. சுயக்கட்டுப்பாடும், கவனமும் கொண்டு நகம் கடிக்கும் பழக்கத்தை விடுவது அவைசியமனது. அல்லது இதும் ஒரு போதைப் போல் நம்மை ஆட்கொள்ளும். நமது கவனத்தையும், சிந்தனையையும் சிதைக்கும். குழந்தைகள் இந்த பழக்கத்தைக் கொண்டிருந்தால் கவனாமாக அவர்களை அந்த பழக்கத்திலிருந்து வெளிக்கொண்டு வருவது அவசியம். மன திடத்தையும், பாதுகாப்பு உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்துவது விரைவில் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர உதவும்.
மேலும் நல்ல சத்தான உணவுகளை அளிப்பதும், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் இந்த பழக்கத்தை விட உதவும். சிறு குழந்தைகளாக இருந்தால் வேப்பெண்ணையை அவர்கள் கைவிரல்களில் அவர்களுக்கு தெரியாமல் தடவிவிட அவர்கள் வாயில் வைத்தால் கசப்பு சுவை ஏற்படும். இதனால் கைவிரல்களை வாயில் வைக்க மாட்டார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்வதால் இந்த பழக்கம் முற்றிலும் மறக்கடிக்கப்படும். வேப்பெண்ணெய் வயிற்றினுள் செல்வதால் வயிற்றிலிருந்தும் பூச்சிகள், புழுக்கள் அழியும்.