Rhinacanthus Nasutus; Nagamalli; Snake Jasmine; White Crane Flower
தமிழகத்தில் அரிதாக பார்க்கப்படும் ஒரு அற்புதமான மூலிகை நாகமல்லி. இந்த செடியின் அற்புத பலன்களைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே இதனைப் வளர்ப்பதுண்டு. எப்பேர்பட்ட விஷ நாகமும் இந்த செடியைக் கண்டு அஞ்சும். எனினும் காடுகள், புதர்களில் இதனைப் பார்க்கலாம்.
நல்ல கசப்பு சுவைக் கொண்ட இந்த நாகமல்லியில் பூக்கள் மிக அழகாக மூன்று இதழ் கோணங்கள் கொண்டு இருக்கும். இந்த செடியின் இலை, வேர், பூ என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டது. சரும நோய்கள், படர்தாமரை, குடல் புழு, விசக் கடிகள், மூட்டுவலி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்தாக நாகமல்லி மூலிகை உள்ளது.
இரத்தத்தை சுத்தம் செய்யும் அற்புதமான மூலிகை. விசக் கடிகள் மட்டுமில்லாமல் நச்சுக்களால் சூழப்பட்ட உடலையும் சுத்தமாக்கும் மூலிகை. நாகமல்லி வேர் இரத்த அசுத்தத்தை நீக்கும்.
வயிற்றுப் பூச்சி
குடல் புழுக்களையும், வயிற்றுப் பூச்சிகளையும் ஒழிக்க நாகமல்லி இலைநீர் சிறந்த பலனை அளிக்கும். மேலும் மலச்சிக்கலை போக்கி பசியைத் தூண்டும் ஆற்றலும் கொண்டது.
மூட்டுவலி
மூட்டுவலி உள்ளவர்கள் நாகமல்லி இலையை அரைத்து மூட்டுகளில் கட்ட விரைவில் வலி, வீக்கம் தீரும்.
விசக்கடி
விசக்கடிகளுக்கு இந்த இலையை மென்று திங்க பலன்கிடைக்கும்.
சரும நோய்கள்
சரும நோய்களுக்கு நாகமல்லி விதை வேர் நல்ல பலன் அளிக்கும். அரிப்பு, நமைச்சல் மட்டுமில்லாமல் நாள்பட்ட தோல் நோய்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.