அன்றாடம் சிறிது தூரம் நடப்பது காலம் காலமாக நமது பாரத நாட்டிலிருக்கும் பண்பாடு. காலையில் எழுந்ததும் வயல், தோப்பு அல்லது காடுகளை சுற்றிவரும் ஒரு பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் உள்ளது. இதனால் நமது முன்னோர்கள் உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி போன்ற தொந்தரவுகளில் இருந்து காக்கப்பட்டனர். ஆனால் நகரங்களில் இதற்கு சாத்தியமும் இல்லை, இதற்கு அர்த்தமும் தெரியாது. ஆங்கங்கே பலர் பூங்கா, கடற்கரை என நகரங்களிலும் ஓடுவதையும் நடப்பதையும் ஆனால் பார்க்கலாம். இதுவும் ஒரு விதத்தில் சிறந்தது தான்.
அவசர உலகில் பலர் உடல் மேல் அல்லது நடை மேல் கவனம் செலுத்தாமல் காதில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பதும், நடையில் அளவை பார்த்துக்கொண்டே நடப்பது சிறந்த பலனை அளிப்பதில்லை. அதனால் நடை பயிற்சி செய்ய நினைப்பவர்கள், செய்பவர்கள் நடக்கும் பொழுது அங்குள்ள மரம், செடி, கொடி, வானம், மேகம், சூரியன், பறவைகள் என நம்மை சுற்றி இருக்கும் இயற்கையானவற்றை ரசித்து நடக்க மிக விரையும் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதனால் மன அழுத்தம், மன சோர்வும் மறையும். நகரங்களிலும் இது சத்தியமே. தினமும் 45 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.
நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்
- நம்முடைய உடலில் இருக்கும் பல நூறு தசைகளும் வலுவடையும், இதனால் உடல் வலி, இறுக்கம், சோர்வு, வீக்கம், பிடிப்பு அகலும்.
- இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவு குறையும்.
- மன அழுத்தம் நீங்கும்.
- இதயத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து உடலின் தெம்பு பெருகும், புது தெம்பு ஏற்படும்.
- நுரையீரல் தூய்மை அடையும்.
- நாள்பட்ட நோய்களில் இருந்து மெல்ல வெளிவர உதவும்.
- என்றும் இளமையாக புத்துணர்வுடன் இருக்கலாம்.
- நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
- செரிமான கோளாறுகள் நீங்கும்.
- உடல் பருமன் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
- எலும்புகளை வலுவூட்டும்.
- கால்வலி, மூட்டுவலி மறையும்.
- நடைப்பயிற்சியால் டிரைகிளிசரின் என்ற கொழுப்பு கரைந்து இதயபாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
- நீரிழிவு உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்ய இரத்த சர்க்கரை அளவு சீராகும்.
- உடலில் உள்ள சோம்பல் மறைந்து சுறுசுறுப்பு உண்டாகும்.
- காலையில் நடைப்பயிற்சி செய்ய சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சத்துக்களை எளிதாகப் பெறலாம்.