மழை காலங்களில் தமிழகமெங்கும் தானாக முளைத்த இருக்கக்கூடிய ஒரு கீரை வகை இந்த முள்ளிக் கீரை. இதனை முள்ளுக்கீரை என்றும் கூறுவதுண்டு. இதனுடைய முட்கள் பச்சை நிறமுடையதாக தோற்றம் தரக்கூடியதாகும். முளைக்கீரை, குப்பைக்கீரையை ஒத்து இருக்கக் கூடிய கீரை. இலைகளின் நுனிகளில் பூங்கொத்தினை கொண்டது. இலைக் கோணங்களில் முள்ளுள்ள கீரை செடி இது. அதனாலேயே முள்ளிக்கீரை என்று அழைக்கப்படுகிறது. சற்று செந்நிற தண்டுடையது செம்முள்ளி கீரை எனப்படும். இதனுடைய இலை, தண்டு, வேர் என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டது.
முள்ளிக் கீரை சத்துக்கள்
பசியை தூண்டக் கூடியதாகவும் தாதுக்களால் வரக்கூடிய தொந்தரவுகளை அகற்ற கூடியதாகவும் இருக்கும் சிறந்த கீரை இந்த முள்ளிக் கீரை. இந்த கீரையில் புரதச்சத்து, இரும்பு, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ வி சி முதலிய சத்துக்கள் மிகுந்துள்ளன.
முள்ளிக் கீரை பயன்கள்
நீரடைப்பு, பாம்புக்கடி, வயிற்று வலி, வீக்கம், அழகை, மூத்திரக்காய் சம்பந்தப்பட்ட நோய்கள், தேள்கடி, கட்டி முதலியன தீர்க்கும். இந்த கீரையை உணவாக நாம் சமைத்து உண்ணலாம். துவரம் பருப்போடு இதனை சேர்த்து பொரியல், கடையல் செய்து இதனை சாப்பிட்டு வரலாம்.
உடல் உஷ்ணத்தை சற்று அதிகரித்து உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கி, நோய் கிருமிகளையும் அழித்து வெளியேற்றும் ஆற்றல் கொண்ட கீரை.
மூத்திரக்காய் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாக இந்தக் கீரை ஏற்ற மருந்தாகும். இந்த கீரை சாற்றில் வாழைத்தண்டு சாறு சம அளவு சேர்த்து பாம்புக்கடி விஷம் தீர உள்ளுக்கும் கொடுப்பார்கள். இந்த கீரையை வேருடன் இடித்து சாறு எடுத்து தேள் கடி, பாம்பு கடி போன்றவற்றுக்கு கொடுத்தால் அவைகள் தீரும்.
வயிற்றுவலி குணமாக இதன் வேரோடு ஓமம், பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொடுக்க நீங்கும். இந்த முள்ளிக்கீரையை தானிய வகைகளுடன் நன்கு வேகவைத்து பால் கறக்கும் பசுக்களுக்கு கொடுக்கும் பால் அதிக அளவில் சுரக்கும்.