ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் புதர்களுக்கு நடுவிலும் இருக்கும் கரையான் புற்று மண் பல நோய்களுக்கு மருந்தாகும்.
பல அமிலங்களையும், இயற்கை ஆற்றலையும் கொண்டுள்ள கரையான் புற்று மண்ணை உடலில் பூசி குளிப்பதும், பூசி சிறிது நேரம் வெயிலில் இருப்பது பல நோய்களை விரட்டு.
உடலில் இருக்கும் கழிவுகளை நீக்க மிக எளிய முறையான இது பல மருத்துவ முறைகள் தீர்க்க முடியாத நோய்களை கூட தீர்க்கும் என்றால் அது மிகையாகது.
மண் குளியல் பயன்கள்
மலச்சிக்கல், வயிற்று வலி, அல்சர், சரும நோய்கள், மன உளைச்சல், அஜீரணம், உடல் வலி, வீக்கங்கள், உடல் துர்நாற்றம், வீங்கிய நரம்புகள் என பல தொந்தரவுகளுக்கு அற்புதமான மருந்து.
பஞ்சபூத சக்தியில் ஒன்றான மண் சக்தியை வெளிப்படுத்த இயற்கை கொடுத்த அற்புத ஆற்றலே இந்த கரையான் புற்று மண். வயிறு மற்றும் சருமத்தில் ஏற்படும் சிறு தொந்தரவுகள் முதல் நாள்பட்ட நோய்களுக்கும் மிக சிறந்த மருந்து இவை. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
Karaiyan Putru Man Kuliyal
வெயில் காலத்தில் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை, மழைகாலத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என இந்த கரையான் புற்று மண்ணைக் கொண்டு மண் குளியல் செய்ய உடல் ஆரோக்கியம் மேம்படும், இரத்த ஓட்டம் சீராகும், புத்துணர்ச்சி அதிகரிக்கும், மன அழுத்தம் மறையும், இளமை காக்கப்படும்.
Mud Bath
எவ்வாறு மண் குளியல் செய்வது
சாலை ஓரங்களில் இருக்கும் கரையான் புற்றிலிருந்து தேவையான அளவு (பாதுகாப்பாக, மேலாக புற்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கட்டிகளை மட்டும் உடைத்து எடுத்து வர வேண்டும்). பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பூசும் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கட்டிகள் இல்லாமல் குழைத்த பின் காலை நேரத்தில் உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் வெயிலில் காயவைத்து பின் நன்கு உடல் முழுவதும் தேய்த்து விட்டு குளிக்க வேண்டும். உடலை குளிச்சியடைய செய்யும் அதனால் உங்கள் உடல் நிலைக்கேற்ப செய்ய வேண்டும்.
யார் யாரெல்லாம் மண் குளியல் செய்யலாம்
நடுத்தர வயதில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது. கப உடம்பு உள்ளவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் கரையான் புற்று மண்ணை பூசி ஊற வைக்காமல் உடனே குளிக்கலாம்.