வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும் மிக எளிய மூலிகை மணத்தக்காளி கீரை. வாய் புண்ணுக்குக் காரணம் வயிற்றுப்புண்ணே.
- மணத்தக்காளி கீரையின் சாறை நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் விரைவில் மறையும்.
- மணத்தக்காளி கீரையுடன் இஞ்சி, தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து காலையில் பருகி வர ஒரு வாரத்தில் நல்ல பலனை பெறலாம்.
- தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க வாய்புண் விரைவில் குணமாகும்.
- அகத்திக் கீரையை ரசம் செய்து மூன்று வேளை சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் சரியாகும்.
- மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் நீங்கும்.
- காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்க நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
- மாவிலையை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடித்தால் குணமாகும்.
- ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
- முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்து உண்ண விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- ரோஜா பூ கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் நீங்கும்.
- நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்குப் புண் குணமாகும்.