தாயிடமிருந்து பெறப்படும் தாய்ப்பால் குழந்தைக்கு வெறும் உணவாக மட்டுமல்லாமல் சிறந்த ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு திறனையும் அளிக்கிறது. இவை குழந்தையின் சீரான ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுவதோடு மன உறுதியையும் அளிக்கிறது. இந்த தொகுப்பில் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துக்களைப் பற்றி பார்க்கலாம். தாய்ப்பாலில் மேலும் தாய்ப்பாலில் உள்ள உயிரியல் சத்துக்களை அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.
- தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்புச் சத்துக்கள் நுண்கிருமிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்ற குடலில் வளர விடாமல் தடுக்கும்.
- Lactoferrin பாலில் உள்ள இரும்பு சத்தை உட்கிரகிக்க உதவும். மேலும் உடலுக்கு தீமை செய்யும் நுண்கிருமிகளை பெருக விடாமல் உதவும்.
- Bifidus factor மலத்தின் அமிலத் தன்மையை நிலை நிறுத்தும். நன்மை செய்யும் குடல் கிருமிகளை பெருக்க உதவும். Salmonella, E.coli போன்ற தீமை செய்யும் கிருமிகள் குடலில் வளரவிடாமல் தடுக்கும்.
- Lysozyme அழற்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. Salmonella, E.coli போன்ற தொற்றை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை அழிக்கவல்லது.
- பாலில் இருக்கும் Oligo Saccharides என்ற மாவு சத்து நோய் கிருமிகளின் நச்சுத் தன்மையை குடலில் ஒட்ட விடாமல் தடுக்கிறது.
- தாய்ப்பாலில் உள்ள வெள்ளை அணுக்கள் பிற வேதிப்பொருட்களை சுரக்க செய்யவும், fungus மற்றும் நோய் கிருமிகளை உள்வாங்கி அழிக்கவும் செய்யும்.
- IgA சுரப்பு சுவாசப் பாதை மற்றும் உணவுப்பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கக் கூடியது.
- மொத்தத்தில் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலையும், மன உறுதி, உடல் வலிமையையும் அளிக்கவல்லது.