வரகு முருங்கைக்கீரை சூப்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவாக இந்த வரகரிசி தோசை இருக்கும்.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

சத்துக்கள் மிகுந்தது இந்த வரகு முருங்கை கீரை சூப். உடலுக்கு தேவையான மாவுச் சத்துக்கள், புரதம், சுண்ணாம்பு, இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த சூப். இரத்த சோகை, மூட்டு தேய்மானம், நீரிழிவு, உடல் பருமன், குழந்தையின்மை என பல பல தொந்தரவுகளுக்கு மாமருந்தாகும் சூப்.

தேவையான பொருட்கள்

  • ½ கப்  வரகு அரிசி வடித்தது
  • 2 கப்  முருங்கை இலை
  • ½ கப்  தேங்காய் துருவல்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 இஞ்சி துண்டுகள்
  • 1 பூண்டு

  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி
  • உப்பு
  • ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  • ஒரு ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் நெய்
  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் வரகு அரிசியை ஒன்றுக்கு மூன்று பங்கு தண்ணீர் வைத்து வடித்துக்கொள்ளவேண்டும். 
  • பின் கொழுந்து முருங்கை இலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும். 
  • மல்லி இலையையும் நறுக்கி கொள்ளவேண்டும்.
  • வாணலியை சூடாக்கி நெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் சேர்த்து  லேசாக வதக்கி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளையும் சேர்த்து அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவேண்டும். 
  • அனைத்தையும் நன்கு ஆறவைத்து அரைக்கவும், பின் அதனுடன் சிறிது தேங்காய்த்துருவல், வேகவைத்த வரகு ஆகியவற்றை சேர்த்து சிறிது சூடேற்றி உப்பு, மிளகுதூள், பெருங்காயத்தூள்  போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். 
  •  சத்துக்கள் மிகுந்த வரகு முருங்கை கீரை சூப் தயார்
5 from 1 vote

வரகு முருங்கைக்கீரை சூப்

சத்துக்கள் மிகுந்தது இந்த வரகு முருங்கை கீரை சூப். உடலுக்கு தேவையான மாவுச் சத்துக்கள், புரதம், சுண்ணாம்பு, இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த சூப். இரத்த சோகை, மூட்டு தேய்மானம், குழந்தையின்மை என பல பல தொந்தரவுகளுக்கு மாமருந்தாகும் சூப்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • ½ கப்  வரகு அரிசி வடித்தது
  • 2 கப்  முருங்கை இலை
  • ½ கப்  தேங்காய் துருவல்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 இஞ்சி துண்டுகள்
  • 1 பூண்டு
  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி
  • உப்பு
  • ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  • ஒரு ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் நெய்
  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் வரகு அரிசியை ஒன்றுக்கு மூன்று பங்கு தண்ணீர் வைத்து வடித்துக்கொள்ளவேண்டும். 
  • பின் கொழுந்து முருங்கை இலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும். 
  • மல்லி இலையையும் நறுக்கி கொள்ளவேண்டும்.
  • வாணலியை சூடாக்கி நெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் சேர்த்து  லேசாக வதக்கி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளையும் சேர்த்து அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவேண்டும். 
  • அனைத்தையும் நன்கு ஆறவைத்து அரைக்கவும், பின் அதனுடன் சிறிது தேங்காய்த்துருவல், வேகவைத்த வரகு ஆகியவற்றை சேர்த்து சிறிது சூடேற்றி உப்பு, மிளகுதூள், பெருங்காயத்தூள்  போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். 
  •  சத்துக்கள் மிகுந்த வரகு முருங்கை கீரை சூப் தயார்

1 thought on “வரகு முருங்கைக்கீரை சூப்

  1. BACZEWSKI1206

    5 stars
    Thank you!!1

Comments are closed.