மூங்கிலரிசியில் பயத்தம் பருப்பு பாயசம்

குறைந்தது நாற்பது வருடங்குக்கு பின் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிசிதான் இந்த மூங்கிலரிசி. மூங்கிலரிசி பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்களை தெரிந்துகொள்ள – மூங்கிலரிசி.

எளிதாக மூங்கிலரிசியில் பாயசம் தயாரிக்கலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சத்தான பானமாகவும் இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி மூங்கிலரிசி
  • 1 கைப்பிடி பயத்தம் பருப்பு
  • 1 கப் நாட்டுச் சர்க்கரை
  • 3 கப் தேங்காய்ப்பால்

  • ½ ஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 6 முந்திரி
  • 10 கிஸ்மிஸ்
  • 2 ஸ்பூன் தேங்காய்  ((பல்லு பல்லாக நறுக்கியது))
  • 2 ஸ்பூன் பசு நெய்

செய்முறை

  • முதலில் மூங்கிலரிசியை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
  • பின் பருப்பையும், மூங்கிலரிசியையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நாட்டு சர்க்கரையை அதனுடன் சேர்க்க வேண்டும். 
  • தேவைப்பட்டால் சற்று சூடாக்கிக் கொள்ளலாம்.
  • பின் தேங்காய்ப்பால் சேர்த்து ஏலத்தூள் சேர்க்க வேண்டும்.
  • முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை பசு நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  • நெய்யில் தேங்காய் துண்டுகளை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம். 
  • சுவையான சத்தான மூங்கிலரிசி பாயசம் தயார்.

மூங்கிலரிசியில் பாயசம்

எளிதாக மூங்கிலரிசியில் பாயசம் தயாரிக்கலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சத்தான பானமாகவும் இது இருக்கும்.
ஆயத்த நேரம் : – 30 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 1 hour

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி மூங்கிலரிசி
  • 1 கைப்பிடி பயத்தம் பருப்பு
  • 1 கப் நாட்டுச் சர்க்கரை
  • 3 கப் தேங்காய்ப்பால்
  • ½ ஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 6 முந்திரி
  • 10 கிஸ்மிஸ்
  • 2 ஸ்பூன் தேங்காய்  ((பல்லு பல்லாக நறுக்கியது))
  • 2 ஸ்பூன் பசு நெய்

செய்முறை

  • முதலில் மூங்கிலரிசியை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
  • பின் பருப்பையும், மூங்கிலரிசியையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நாட்டு சர்க்கரையை அதனுடன் சேர்க்க வேண்டும். 
  • தேவைப்பட்டால் சற்று சூடாக்கிக் கொள்ளலாம்.
  • பின் தேங்காய்ப்பால் சேர்த்து ஏலத்தூள் சேர்க்க வேண்டும்.
  • முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை பசு நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  • நெய்யில் தேங்காய் துண்டுகளை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம். 
  • சுவையான சத்தான மூங்கிலரிசி பாயசம் தயார்.

மேலும் சில மூங்கிலரிசி உணவுகள்…