உடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மூங்கிலரிசி பற்றி சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள – மூங்கில் அரிசி.
தேவையான பொருட்கள்
மேல் மாவுக்கு
- 2 கப் மூங்கிலரிசி மாவு
- 1 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
- 8 – 10 துண்டுகள் வாழை இலை
- 8 -10 துண்டுகள் பனையோலை
- தேவையான அளவு உப்பு
பூரணத்துக்கு
- 1 கப் தேங்காய் துருவல்
- ¼ கப் வெல்லம்
- சிறிதளவு ஏலக்காய்த்தூள்
செய்முறை
- முதலில் அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.
- கொதித்த நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து, கொதிக்கும்போதே, மூங்கிலரிசி மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகத் கொட்டி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும்.
- கொட்டிய மூங்கிலரிசி மாவு கெட்டியானதும் இறக்கி, சற்று ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
- பூரணம் தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.
- தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும்.
- அவ்வாறு பனையோலையை சுத்தம் செய்து மாவினை லேசாக பரப்பி பூரணடையும் வைத்து மூடவும்.
- அதில் இருக்கும் நாரினைக்கொண்டு பனைஓலையினை கட்டிவிடவும்.
- இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- வாழை இலை, பனை ஓலை மணத்தோடும், சுவையோடும் மூங்கிலரிசி கொழுக்கட்டை தயார்.
- சில கொழுக்கட்டைகளை உருண்டையாகவும், கையால் கொழுக்கட்டையாகவும் பிடித்து வேகவைக்கலாம்.
மூங்கிலரிசி இலை கொழுக்கட்டை