குறைந்தது நாற்பது வருடங்குக்கு பின் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிசிதான் இந்த மூங்கிலரிசி. மூங்கிலரிசி பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்களை தெரிந்துகொள்ள – மூங்கிலரிசி.
எளிதாக மூங்கிலரிசியில் சிறுதானிய வகையை சேர்ந்த தினையையும் சேர்த்து குழந்தைகள் விரும்பும் லட்டு தயாரிக்கலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சத்தான சிற்றுண்டியாக இது இருக்கும்.
சுவையான சத்தான மூங்கிலரிசி தினை லட்டு. உடலை தேற்றும் சிறந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு ஏற்ற சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
- 1 கப் மூங்கிலரிசி மாவு
- 1 கப் தினை அரிசி மாவு
- 1 ½ கப் பசு நெய்
- 2 கப் நாட்டுச் சர்க்கரை
- 1 கப் தேங்காய்த் துருவல்
- 1 ஸ்பூன் கசகசா
- 10 முந்திரி
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மூங்கிலரிசி மாவினை சிறு தீயில் நன்கு வறுக்கவும்.
- பின் தினை அரிசி மாவினையும் சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- இரண்டையும் சேர்த்து, அவை சூடாக இருக்கும் பொழுதே நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
- நெய்யினை சூடேற்றி அதனில் கசகசாவையும், தேங்காய்த் துருவல், உடைத்த முந்திரியையும் சேர்த்து லேசாக வறுத்து இந்த மாவில் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
- மூங்கிலரிசி தினை உருண்டை சுவையாக இருக்கும்.
மூங்கிலரிசி தினை லட்டு

மேலும் சில மூங்கிலரிசி உணவுகள் …