உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் சிறந்த பாரம்பரிய அரிசி இந்த மூங்கில் அரிசி (Bamboo Rice / Moongil Arisi). அனைவருக்கும் ஏற்ற அரிசி. வயதானவர்கள் அவ்வப்பொழுது உட்கொள்ள உடல் பலப்படும்.
குறைந்தது நாற்பது வருடங்குக்கு பின் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிசிதான் இந்த மூங்கிலரிசி. மூங்கிலரிசி பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்களை தெரிந்துகொள்ள – மூங்கிலரிசி.
எளிதாக மூங்கிலரிசியில் பாயசம் தயாரிக்கலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சத்தான பானமாகவும் இது இருக்கும். இதனுடன் பிஸ்தா குங்குமப்பூ சேர்த்து பருக சுவை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
- ¼ கப் மூங்கிலரிசி
- ¼ கப் தேங்காய் பால்
- ½ கப் நாட்டுச் சர்க்கரை
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
- 5 முந்திரி
- 5 திராட்சை
- 2 ஸ்பூன் பசுநெய்
செய்முறை
- மூங்கிலரிசியினை சிவக்க வறுக்கவும். பின் அதனை ஒன்றும் பாதியுமாக உடைத்துக்கொண்டு நன்கு குலைய வேகவிடவும்.
- வெந்ததும் மத்தால் நன்கு மசித்து, ஏலக்காய்த்தூளுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை தூள் செய்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, மூங்கிலரிசியுடன் சேர்க்கவும்.
- நன்கு கொதிவந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பசுநெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து மூங்கிலரிசியுடன் கலந்து தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தவும்.
- குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் உடல் பலத்தையும், தெம்பையும் அளிக்கக்கூடியது இந்த மூங்கிலரிசி பாயசம்.
மூங்கிலரிசி பாயசம்
எளிதாக மூங்கிலரிசியில் பாயசம் தயாரிக்கலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற சத்தான பானமாகவும் இது இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
பரிமாறும் அளவு : – 3
தேவையான பொருட்கள்
- ¼ கப் மூங்கிலரிசி
- ¼ கப் தேங்காய் பால்
- ½ கப் நாட்டுச் சர்க்கரை
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
- 5 முந்திரி
- 5 திராட்சை
- 2 ஸ்பூன் பசுநெய்
செய்முறை
- மூங்கிலரிசியினை சிவக்க வறுக்கவும்.
- பின் அதனை ஒன்றும் பாதியுமாக உடைத்துக்கொண்டு நன்கு குலைய வேகவிடவும்.
- வெந்ததும் மத்தால் நன்கு மசித்து, ஏலக்காய்த்தூளுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை தூள் செய்து, தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, மூங்கிலரிசியுடன் சேர்க்கவும்.
- நன்கு கொதிவந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
- பசுநெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து மூங்கிலரிசியுடன் கலந்து தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தவும்.
- குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் உடல் பலத்தையும், தெம்பையும் அளிக்கக்கூடியது இந்த மூங்கிலரிசி பாயசம்.