உடலுக்கு நல்ல பலத்தையும், தெம்பையும் அளிக்கும் பாயசம். குழந்தைகள் முதல் பெரியவர்கள், வயதானவர்களுக்கும் ஏற்ற இனிப்பு பாயசம். எளிதாக செரிமானமாகும் சிறந்த உணவு. வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் பாசிப்பருப்பு
- 1/2 – 3/4 கப் கப் வெல்லம்
- 3/4 தேங்காய்ப் பால்
- ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள்
- சிறிது முந்திரி
- சிறிது திராட்சை
- 1 – 2 ஸ்பூன் நெய்
செய்முறை
- இரும்பு வாணலியில் பருப்பை வாசம் வறுத்து வரை வறுத்து,
- பின் அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
- வெல்லத்தை சிறிது நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனை சூடாக்கிக் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
- வெல்லத்திற்கு பதில் நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- வெல்லத்துடன் வெந்த பாசிப் பருப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, ஏலக்காய்த் தூளையும் நெய்யில் வறுத்த முத்திரி, திராட்சையையும் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்த பின் அடுப்பை அனைத்து தேங்காய்ப் பால் சேர்த்து பரிமாறவும்.
- சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயசம் தயார்.
பருப்புப் பாயசம்