வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து தயாரிக்கக்கூடிய எளிமையான சூப். உடலுக்கு உகந்தது இந்த மூலிகை சூப். தொண்டைக்கு இதமான இந்த சூப் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், உயிர் சத்துகளையும் மற்ற சத்துக்களையும் கொண்டது. சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்
- 4 சின்ன வெங்காயம்
- ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
- 4 பல் பூண்டு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 4 வெற்றிலை
- 4 துளசி இலை
- 2 சிறிய நாட்டு தக்காளி
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, சீரகம், மிளகு, வெற்றிலை, துளசி இலை, நாட்டு தக்காளி ஆகியவற்றை லேசாக ஓரிரு நிமிடம் நல்லெண்ணெயில் வதக்கி ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து (தேவைபட்டால் வடிகட்டி மீண்டும் ஒருமுறை நீர் விட்டு அரைத்து வடிகட்டி) தேவையான அளவு நீர் விட்டு அடுப்பில் ஒரு கொதி கொதிக்க விடவும்.
- கொதி வந்த பின் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான மூலிகை சூப் தயார்.
மூலிகை சூப்
வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து தயாரிக்கக்கூடிய எளிமையான சூப். உடலுக்கு உகந்தது இந்த மூலிகை சூப். தொண்டைக்கு இதமான இந்த சூப் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், உயிர் சத்துகளையும் மற்ற சத்துக்களையும் கொண்டது. சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏற்றது.
பரிமாறும் அளவு : – 3
தேவையான பொருட்கள்
- 4 சின்ன வெங்காயம்
- ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
- 4 பல் பூண்டு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 4 வெற்றிலை
- 4 துளசி இலை
- 2 சிறிய நாட்டு தக்காளி
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, சீரகம், மிளகு, வெற்றிலை, துளசி இலை, நாட்டு தக்காளி ஆகியவற்றை லேசாக ஓரிரு நிமிடம் நல்லெண்ணையில் வதக்கி அறவிடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்சியில் அரைத்து (தேவைபட்டால் வடிகட்டி மீண்டும் ஒருமுறை நீர் விட்டு அரைத்து வடிகட்டி) தேவையான அளவு நீர் விட்டு அடுப்பில் ஒரு கொத்தி கொதிக்க விடவும்.
- கொதிவந்தபின் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான் மூலிகை சூப் தயார்.