உடல் நலம் காக்கும் மர மூலிகைகள்

மர மூலிகைகளும் அதன் பயன்களும்

அத்திமரம்

அத்தி மரத்தின் இலைகள், காய்கள், பழங்கள் என அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அத்தி மரம் வயிறு உபாதைகள் மற்றும் மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்து.

குமிழ் மரம்

குமிழ் மர இலைகள் சளி, விஷக்கடி மற்றும் வயிற்றுப்புண் ஆகிய நோய்களையும், பட்டைகள் வயிற்று வலிக்கும், பழங்கள் உடல் சூடு மற்றும் ரோம வளர்ச்சியின்மை ஆகிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் பயன்படுகிறது.

மருத மரம்

மருத மர இலைகள், பழங்கள் மற்றும் பட்டை இதயத்தைப் பலப்படுத்தக் கூடியது.

வில்வ மரம்

வில்வ மரத்தின் இலைகள், பழங்கள் மற்றும் வேர்கள் பல நோய்களுக்கு நல் மருந்தாகப் பயன்படுகிறது. சளி, ஜீரணக்கோளாறு, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

வேம்பு

வேம்பின் இலைகள் வயிற்றுப் புழுக்களை அழித்து வெளியேற்றும், அம்மை, சொறி, சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கவும் பயன்படுகின்றன.