மூலிகை குடிநீர் / Herbal Water Recipe

பரவி வரும் நோய் தொற்று, கோடைகாலம், தொடர் மன உளைச்சல் இவ்வாறு சுழன்று கொண்டிருக்கும் நமக்கு இருக்கும் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமாகிறது மூலிகை குடிநீர்.

இந்த மூலிகை குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் சிறந்த குடிநீராகவும் உள்ளது. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்றவும், உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துகளை அளிக்கவும் உதவுகிறது. மொத்தத்தில் இன்றைய சூழ்நிலை காலத்திற்கு ஏற்ற மூலிகை குடிநீர்.

தேவையான பொருட்கள்

  • 1 கிராம் ஜாதிக்காய் (** ஜாதிக்காயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்)
  • 20 ஏலக்காய்
  • 20 லவங்கம் ( (கிராம்பு))
  • 10 கிராம் வெட்டிவேர்
  • சுத்தமான வெள்ளை துணி
  • 10 லிட்டர் சுத்தமான குடிநீர்

செய்முறை

  • ஏலக்காய், லவங்கம், ஜாதிக்காய் ஆகியவற்றை இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் இடித்தவற்றுடன் வெட்டிவேர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி கொள்ளவும்.
  • 10 லிட்டர் குடிநீரை மண் பானையில் எடுத்து அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.

  • மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீருடன் மேலும் பத்து லிட்டர் சுவைக்கு ஏற்ப தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த நீரை நான்கு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

  • எந்த இரசாயனமும் கலக்காத நீரை மட்டும் பயன்படுத்தவும். பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்படும் குடிநீர் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கபட்டிருக்கும். இது மூலிகை தன்மையை மாற்றி கெடுத்து விடும்.
  • மூலிகை முடிச்சை வெயிலில் காயவைத்து இரண்டு முறை இவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம்.

மூலிகை குடிநீர்



பரவி வரும் நோய் தொற்று, கோடைகாலம், தொடர் மன உளைச்சல் இவ்வாறு சுழன்று கொண்டிருக்கும் நமக்கு இருக்கும் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமாகிறது மூலிகை குடிநீர்.



தேவையான பொருட்கள்
  • 1 கிராம் ஜாதிக்காய் (** ஜாதிக்காயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்)
  • 20 ஏலக்காய்
  • 20 லவங்கம் ( (கிராம்பு))
  • 10 கிராம் வெட்டிவேர்
  • சுத்தமான வெள்ளை துணி
  • 10 லிட்டர் சுத்தமான குடிநீர்
செய்முறை
  1. ஏலக்காய், லவங்கம், ஜாதிக்காய் ஆகியவற்றை இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பின் இடித்தவற்றுடன் வெட்டிவேர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி கொள்ளவும்.
  3. 10 லிட்டர் குடிநீரை மண் பானையில் எடுத்து அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.
  4. மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீருடன் மேலும் பத்து லிட்டர் சுவைக்கு ஏற்ப தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த நீரை நான்கு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
  5. எந்த இரசாயனமும் கலக்காத நீரை மட்டும் பயன்படுத்தவும். பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்படும் குடிநீர் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்க பட்டிருக்கும். இது மூலிகை தன்மையை மாற்றி கெடுத்து விடும்.
  6. மூலிகை முடிச்சை வெயிலில் காயவைத்து இரண்டு முறை இவ்வாறு மீண்டும் பயன்படுத்தலாம்.